Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று 16.10.2018

அக்டோபர் 16 (October 16) கிரிகோரியன்
ஆண்டின் 289 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 290 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 76 நாட்கள் உள்ளன.
• 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார்.
• 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார்.
• 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார்.
• 1793 – பிரெஞ்சுப் புரட்சியின் உச்சக் கட்டத்தில் பதினாறாம் லூயி மன்னரின் மனைவி மரீ அன்டோனெட் தலை துண்டிக்கப்பட்டுமரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
• 1793 – வாட்டிக்னீசு போரில் பிரான்சு வெற்றி பெற்றது.
• 1799 – பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார்.
• 1813 – ஆறாவது கூட்டணி நாடுகள் நெப்போலியன் பொனபார்ட் மீது லீப்சிக் நகரில் தாக்குதலை ஆரம்பித்தன.
• 1834 – லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் தொன்மைப் பொருட்கள் பல எரிந்து சேதமடைந்தன.
• 1846 – வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் ஈதர் மயக்க மருந்தை முதற்தடவையாக மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பரிசோதித்தார்
• 1905 – உருசிய இராணுவம் எஸ்தோனியாவில் மக்கள் கூட்டமொன்றின் மீது சுட்டதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.
• 1905 – பிரித்தானிய இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது.
• 1916 – மார்கரெட் சாங்கர் அமெரிக்காவின் முதலாவது குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனையை நியூயார்க் புரூக்ளினில் ஆரம்பித்தார்.
• 1923 – வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
• 1934 – குவோமின்டாங்குகளுக்கு எதிரான சீனக் கம்யூனிஸ்டுக்களின் தாக்குதல் ஆரம்பமானது.
• 1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மீதான செருமனிய வான்படையின் முதலாவது தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
• 1942 – பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் உயிரிழந்தனர்.
• 1946 – நியூரம்பெர்க் தீர்ப்பாயம்: போர்க் குற்றம் சாட்டப்பட்ட நாட்சி தலைவர்களின் தூக்குத்தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
• 1949 – கிரேக்கக் கம்யூனிசத் தலைவர் நிக்கலாசு சக்காரியாடிசு தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தார். கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
• 1951 – பாக்கித்தானின் முதலாவது பிரதமர் லியாகத் அலி கான் இராவல்பிண்டியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
• 1964 – சோவியத் தலைவர் லியோனீது பிரெசுனேவ் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் பிரதமராகவும் பதவியேற்றனர்.
• 1964 – சீனா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
• 1968 – யசுனாரி கவபட்டா இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது சப்பானியர் என்ற பெருமையைப் பெற்றார்.
• 1973 – என்றி கிசிஞ்சர், வியட்நாம் கயூனிஸ்டுக் கட்சித் தலைவர் லே டூக் தோ ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
• 1975 – ஆத்திரேலியத் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐவர் போர்த்துக்கீசத் திமோரில் இந்தோனேசியப் படைகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
• 1975 – பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள்.
• 1978 – கரோல் வொச்தீலா இரண்டாம் அருள் சின்னப்பர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• 1984 – தென்னாபிரிக்காவின் டெசுமான்ட் டுட்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்...

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading