பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஆன்லைன் முறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை!


       

புதுக்கோட்டை,அக்31-       தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு உதவியாளர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன்(இணையதளம்வாயிலாக) வாயிலாக சென்னையில் இருந்து நடைபெற்றது.

அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் முறையில் நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்த 8 பேர் கலந்துகொண்டர்.இதில் 6பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலகங்கள்,மாவட்டக்கல்வி அலுவலகங்கள்,மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் காலியாக இருந்த உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வில் தேர்வு செய்தனர்.ஒருவர் வெளிமாவட்டத்தினை தேர்வு செய்தனர்.

ஒருவர் எவ்வித இடத்தினையும் தேர்வு செய்யவில்லை. அதனைத்தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பதவிஉயர்வில் உதவியாளர் பணியிடங்களை தேர்வு செய்த 7பேர்களுக்கும் முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பதவி உயர்விற்கான பணி ஆணையினை வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்...

பின்னர் ஆன்லைன் முறையில் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்திய தமிழக அரசுக்கு உதவியாளர்கள் நன்றி தெரிவித்தனர்..

Share this