Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Today Rasipalan 16.10.2018

மேஷம் மேஷம் இன்று பல பிரச்னைகள்
ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம் ரிஷபம் இன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்களுக்கு புதிய வாகனம் வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7  

மிதுனம் மிதுனம் இன்று உத்தியோகம் சிறக்கும். உங்கள் தொழில் மூலம் பணவரவு அதிகரிக்கும். எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். செம்பு, தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

கடகம் கடகம் இன்று வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

சிம்மம் சிம்மம் இன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9  

கன்னி கன்னி இன்று குடும்பத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு தேடி வரும். உடல்நலத்தில் சிறு குறைபாடு வரலாம். நாவன்மையால் உங்கள் வேலைகளை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மீக சொற்பொழிவுகள், உபன்யாசங்கள் செய்வோருக்கு உகந்த காலமாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம் இன்று அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களால் யோகம் கிடைக்கும். உங்களால் உங்களுக்கு பெருமையும் செல்வமும் கிடைக்கும். வாகன வழிகளில் விரையம் ஏற்படலாம். நிலம் வீடு வாகனம் வாங்கும் போது கவனம் தேவை. முதலீடுகள் செய்யும் போதும் கவனத்துடன் செய்யவும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9  

விருச்சிகம் இன்று பிள்ளைகளிடம் மிக எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையாருடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எதிரிகளின் தொல்லைகள், கடன்சுமைகள் அடங்கும். தாய் மாமனால் அனுகூலம் கிடைக்கும். தடைபட்டிருந்த திருமணம் இனிதே நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு இன்று பொருளும் புகழும் கூடும். அரசியலில் தொல்லைகள் விலகும். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் படைப்பர். பொதுவாக தொல்லைகளும் பிரிவினையும் நீங்கி ஒற்றுமையும் உயர்வும் ஏற்படும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9  

மகரம் இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். அண்டை அயலாருடன் இருந்து வந்த பிணக்கு மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 

கும்பம் இன்று உங்கள் வளர்ச்சியினால் உங்கள் தந்தை சந்தோஷம் அடைவார். மன நல ஆலோசகர்களாக இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குறிப்பாக மருத்துவ தொழிலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம் இன்று தங்கள் நிலையை கருத்தில் கொள்வதோடு வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive