NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்


                 சிதம்பரத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்டப்படிப்பை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பை முடித்த மாணவி ஒருவரை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்தாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஐந்தாண்டு பட்டப்படிப்பு பயிலும் சிதம்பரம் மாணவர்கள் ஆவேசமடைந்தனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு நாங்கள் தகுதியில்லையா? எனக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து பல்கலைக்கழக வளாகத்தில் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று சிதம்பரம் காந்தி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் விரைந்து சென்று மாணவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவ, மாணவிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டனர். அப்போது எம்.ஏ ஆங்கிலம் முதலாமாண்டு பயிலும் பிரசன்னா என்ற மாணவி மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மாணவிகள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அம்மாணவியை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.இதன்பின்னர் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் மாற்றுபாதையில் போக்குவரத்துதிருப்பிவிடப்பட்டது. மதியம் 2 மணியளவில் சிதம்பரம் சப்கலெக்டர் சுப்ரமணியம், அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் மீனாட்சிசுந்தரம், முதல்வர் செல்வராஜ், மற்றும் அதிகாரிகள் மாணவ பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சப்கலெக்டர் சுப்ரமணியம் பேசுகையில் ‘அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 24 ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கு அனுமதிஅளித்து தமிழக அரசு அரசாணை எண்.75  2011ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வாணையத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை‘ என்றார். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive