NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்



              ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்.... 

 

                மாண்புமிகு தமிழக அரசுக்கு ஒரே ஒரு கோரிக்கை 2009 க்குப்பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்க கோரிக்கை. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை நீக்கி ஊதிய விகிதத்தை PB-1ல் இருந்து PB-2 மாற்றி வழங்க வலியுறுத்தியும், உடனடியாக இடைகால அடிப்படையில் 01.06.2009-க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க மே 4ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்........* தமிழகத்தில் 2009க்குப் பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம், கடைநிலை ஊழியர்களின் ஊதியத்திற்கு இணையாக உள்ளது .31.05.2009 க்கு முன்னர், பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370ம், 01.06.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு, ரூ 5200 என்றும் ஒரே பதவி ,ஒரே பணி,ஒரே தகுதி என்று அனைத்தும் ஒன்றாக பெற்றவர்களுக்குள் இரு வேறுபட்ட ஊதியத்தை 6வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்தனர். இதனால், 01.06.2009க்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்திலேயே ரூ.3170 குறைந்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும், என்று உச்ச நீதி மன்றம் ஆணை தமிழகத்தில் பின்பற்றபடவில்லை.கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் கூறியுள்ளவாறு, இரண்டு தகுதித்தேர்வை  தமிழகத்தில் நடத்தி சுமார் 10,000 தகுதியான இடைநிலை ஆசிரியர்களை தமிழகத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்கப்படவேண்டும் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் பின்பற்றப்படவில்லை. 

 

               மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், சட்டமன்ற தேர்தலின் போது 6ஆவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகள் அனைத்தும் களையப்படும், என்று வாக்குறுதி அளித்தார்கள் .சட்டமன்ற தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை. ஆகவே,3 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை உடனே வெளியிடவேண்டும்.அதில் 2009 க்குப்பின்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில், அதற்கு முன்னர் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப்போல வழங்கப்படவேண்டும், என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில் நடைபெறும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive