NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு அரசுக்கு கோரிக்கை


            பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.


           பள்ளிக் கல்வித்துறையின் 181 உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டுமூக நீதிக்கு எதிரான அரசாணை 252ஐ திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.




9 Comments:

  1. Kothandam sir pepar 1 Ku CV yeapputhu natakum ple reply

    ReplyDelete
  2. Kothandan.s pillaipakkam11/27/2013 9:51 am

    After erkadu election friend.

    ReplyDelete
  3. only eligible person go to job.
    இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வு NO.
    ALL CASTE ARE SAME.
    KALVIIL ENTHA PAKKUPADDUM KODATHU.

    ReplyDelete
  4. Reservation should be followed as per central govt norms. Nobody is willing to struggle against this issue. All appointment only after election.

    ReplyDelete
  5. 2002 b.sc 2003 b.ed 2004 m.a eco. Am I eligible for pg promotion. B.ed regular m.a eco distance education

    ReplyDelete
  6. Hi frnds , namma nilamailathan niraya per suthikitu irukanga. Nanum apdi than. Anal ena pana, entha information um varamatingathu. Itha nampitu vera entha work um pogamudiama, v2layum pathil sollamudiyama, namma padra kastam patthilam ivangaluku ena kavalai. Avanga pona thadava 1 monthla ella process mudichu velai koduthanga. Anal ipa ellame late. Ellam namma thalai eluthu nanpa.. Wait panuvom. Porutthar poomi aalvarnu solvanga, anal ivlo yarum porumaya irukka mudiyathu. 7 months aachu pa nimmathiya saaptu, thoonki. Kadavul than paakanum...By GK

    ReplyDelete
  7. Hi frnds , namma nilamailathan niraya per suthikitu irukanga. Nanum apdi than. Anal ena pana, entha information um varamatingathu. Itha nampitu vera entha work um pogamudiama, v2layum pathil sollamudiyama, namma padra kastam patthilam ivangaluku ena kavalai. Avanga pona thadava 1 monthla ella process mudichu velai koduthanga. Anal ipa ellame late. Ellam namma thalai eluthu nanpa.. Wait panuvom. Porutthar poomi aalvarnu solvanga, anal ivlo yarum porumaya irukka mudiyathu. 7 months aachu pa nimmathiya saaptu, thoonki. Kadavul than paakanum...By GK

    ReplyDelete
  8. Kothandan.s pillaipakkam.11/28/2013 7:03 am

    After pongal tet teacher appointment. Dinamalar news.

    ReplyDelete
  9. பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி
    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி
    தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர்.

    ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர்,தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால்,பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
    டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு,மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்,இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

    இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண்,ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.

    கடும் போட்டி : அதேபோல், பட்டதாரி ஆசிரியரை பொறுத்தவரை,பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்ட படிப்பிற்கு, 15 மதிப்பெண் மற்றும் பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
    இந்த, 40 மதிப்பெண்களையும், முழுமையாக பெற வேண்டும் எனில்,முறையே, 90 சதவீதம், 70 சதவீதம் (பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,)மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இத்துடன், டி.இ.டி., தேர்வில், 90சதவீத மதிப்பெண் (150க்கு, 135 மதிப்பெண்) பெற்றிருப்பவர்களுக்கு மட்டுமே, வேலை உறுதி. மற்றவர்கள், கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.


    கடந்த தேர்வுகளில், காலி பணியிடங்களை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடாமல், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைத்தது. ஆனால், தற்போது, காலியிடங்கள் எண்ணிக்கை குறைவாகவும்,தேர்ச்சி பெற்றிருப்பவர் எண்ணிக்கை, அதிகமாகவும் இருப்பதால்,இந்த போட்டி ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive