NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலி


          அரசு உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் குளறுபடியால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
         தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள்  மேனிலைப் பள்ளிகள் 2700,2800 இயங்கி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுத உள்ளனர். ஆனால் இப் பள்ளிகளில் 2000 தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு விதமான அரசு உத்தரவுகள் இருப்பதை காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இடங்களை நிரப்பாமல் உள்ளனர்.

               உயர்நிலை மேனிலை பள்ளிகளில் உள்ள வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு பாட ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் பாடங்களில் உள்ள உள்பிரிவுகளையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்படி அறிவியல் பாடத்துக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் என்ற உள்பிரிவுகளை கருத்தில் கொண்டும், சமூக அறிவியல் பாடத்தில் வரலாறு, புவியியல், பிரிவுகளை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

              ஆனால் மொழிப்பாடங்களை பொருத்தவரை ஆங்கிலத்துக்கு தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். அதேசமயம் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது குழப்பங்களை அதிகாரிகள் செய்து வருவதாக தமிழாசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பதவி உயர்வு மூலம் தமிழாசிரியர்கள் நியமிக்கும் போது, 1988ல் போடப்பட்ட அரசு உத்தரவு 686ல் கூறப்பட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்று தமிழாசிரியர்கள் கேட்கின்றனர். அதன்படி பி.டி ஆசியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது, பணியில் சேர்ந்த காலத்தை பணி மூப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைப்பின்பற்றி அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

                ஆனால் பிடி தமிழாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது மட்டும் 2007ல் போடப்பட்ட அரசு உத்தரவு 161ஐ காரணம் காட்டி பதவி உயர்வு வழங்க மறுப்பதாக தமிழாசிரியர்கள் கூறுகின்றனர். 161 அரசு உத்தரப்படி பி.எட் அல்லது பி.லிட் முடித்திருந்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் அல்லது நேரடியாக தமிழாசிரியர் பணி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. இதனால் உயர்நிலைப் பள்ளிகளில் 1200 தமிழாசிரியர் பணியிடங்களும், மேனிலைப் பள்ளிகளில் 600 தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.


                   இந்த பிரச்னை குறித்து தமிழாசிரியர்கள் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாமல் போனதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பிரிவுகளிலும் பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனம் என (தமிழாசிரியர்கள் உள்பட) 13450 ஆசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ளன. குறிப்பாக மொழிப்பாடத்தில் தமிழாசிரியர்கள் இல்லாமல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு தமிழாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.




9 Comments:

  1. sambalam kodukka yosuthu thane august la mudinga exam ku innum posting podama irukanga result um vandhachu nanlum matric school job resign panni govt velai varum endru kathirukom family kastathula irukku govt ennanna june madham than posting podanum endru ninaikaranga appa tet exam april la vaika vendithuthane nanga private la velai parthu kanji kudichirupom free mixi grinder fan kodupanga education la children teacher illa school irukarathai pathiyo pass pannavanga varumaiyil irupathai pathiyo yosanai last year mattum October nadanda exam ku December mathame appointment koduthangale ivungalukku vilambaram vendumanal eduvum nadakum engal kashtam parunga nangalum kulanthaigal , family nu irukom please engal meethu karunai kattunga case pottu ilukathanga pg la join pannavum mudiyala tamil mattum case la irukku tamil padithavangalukku tamil nattily mariyathai illai pesama Singapore polam pola

    ReplyDelete
  2. chennaila yarum illa ellam by electionku yercaud poirukkanga avanga vanthathan posting pathi yosippanga

    ReplyDelete
  3. Arasanukku asai pattu purusanai kaivitta kathaiyatchi namma nilamai ......?

    ReplyDelete
  4. Tet pass panninom endra orey karanathukaka erukara velaiyai elanthu ,vera velaikum poga mudiyamal , moonu masam vealaiyai resign panni padichi pas panni ,engalluku mingeyathu kadan, varumai matumey, posting eppo poduvomnu conforma sollitu exam date allowance pannungapa , athuvaraikum nangalum enga lifepa papom, ethnalthan varumai kottuku kelay valum familyley eruthu yarum padika matennu solranga.

    ReplyDelete
  5. Kothandan sir neengalavathi aruthala nalu sollunga....

    ReplyDelete
  6. ippa private school poi kenjinalum I year agreement eluthi thara soldranga tet pass nu sonnalum kandippa velai kodukka mattanga enna govt vandhathum resign pannuvangannu avungalukku avunga students padhipanga tet pass pannavangalukku ini cv ku munnadi thiruvodu ondru vangi thanga athu vanga kuda engalidam panam illai sernthe irupathu pulamaiyum varumaiyum enbathu sariyathan irukku friends eearkadu pogalam vanga nalla sapadavathu kidaikum panamum kidaikum .

    ReplyDelete
  7. namellam yennathan AC, AC comments koduththalum nammaloda varutham 24 mani neramum AC la vukkarnthirukira antha paya pullaingaluku theriyathu .

    ReplyDelete
  8. MadhumathiARANI11/27/2013 5:53 pm

    TET PASS PANNAVANGALAI MATTUM TAMIL TEACHERAGA NIYAMIKKANUM AUTHUM B.ed IRUNTHALMATTUM .. PANIYEL IRRUNTHALUM 'BED' IRUNTHAL MATTUMAME PANI UYARVU KODUKKAVENDUM

    ReplyDelete
  9. B.Litt ,d ted ku 2 nd paper approval kodupathum tamil bt teacher posting kodupathum mudhalil nirutha vendum appa bed padippu edtharkaga nam mattum bed 1 year padikanuma evunga udambu nogama padikama eppadi bed teacher salary vanga mudiym 1 paper mattum elutha vendum ma MPhil phd padithavanukku eligible illaiyam verum blitt dted ku eligible irukam ennappa idhu

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive