NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IAS தேவை தன்னம்பிக்கையே....


         பெண்களில் சிலரே ஐஏஎஸ் தேர்வுக்குச் செல்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஐஏஎஸ் பணி சவாலானது என்ற கருத்து பரவலாக பெண்களிடம் உள்ளதே இதற்கு காரணம். 


        இந்தப் பயம் தேவையற்றது என்கிறார் கூடுதல் தலைமைச் செயலர் நிலையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்  துணைத் தலைவராக இருந்த சூசன் மேத்யு. ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஐஏஎஸ் ஆனது குறித்தும், அதில் சவாலாக அமைந்த பணிகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டதில் இருந்து…

உங்களது ஆரம்பக்காலம் எப்படி?

      கேரளத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில் பிறந்தேன். அங்கு பள்ளிக் கல்வி முடித்த நிலையில், சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றேன். பின்னர்ஆலுவாவுக்கு திரும்பி தந்தை பணி புரிந்த கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டமேற்படிப்பு படித்து முடித்தேன்.

ஐஏஎஸ் ஆர்வம் வந்தது எப்படி?

      பட்ட மேற்படிப்பு முடித்தவுடன் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு முன்னர் படித்த பலர் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதில் ஈடுபட்டதைப் பார்த்து எனக்கும்ஆர்வம் ஏற்பட்டது. 1974-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்றேன். 1975-ம்ஆண்டு ஐஏஎஸ் ஆக தேர்ச்சி பெற்றேன்.

ஐஏஎஸ் பணிகாலத்தில்…

      முதலில் கோவையில் உதவி ஆட்சியராக ஓராண்டுகாலம் பயிற்சியை முடித்தேன். பின்னர் ராமநாதபுரத்தில் சப் கலெக்டராக பணியைத் தொடங்கினேன். அதன் பின் 1979-ல் சென்னையில் வருவாய்த்துறை சார்பு செயலராகப் பணியமர்த்தப்பட்டேன்.

பணிக் காலத்தில் சந்தித்த சவால்கள்…

          வருவாய்த் துறையில் இருந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலராக சிலமாதங்கள் பணி புரிந்தேன். இந்தப் பணி மிகவும் சவாலாக இருந்தது. அதன் பின்னர் உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் திட்டஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்டேன். மதுரை மாவட்டம் மேலூர் அருகில் கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டது.பல தலைமுறைகளாக மக்களிடம் பழக்கத்தில் உள்ள குழந்தை வளர்ப்பில் தலையிட்டு அவர்களது பழையஅணுகுமுறைகளுக்கு மாற்றாக புதிய ஊட்டச் சத்துகளை வழங்குவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும் போது, அதுவும் குறிப்பாக கிராமப்புற பகுதி மக்களிடம் இதனைக்கொண்டு செல்வது ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது.அன்று மேற்கொள்ளப்பட்ட இத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே சத்துணவுத் திட்டம்,குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வழங்கும் திட்டங்களும் இப்போது செயல்படுத்தப்படுகின்றன. இத் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலகவங்கி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் பாராட்டு கிடைத்தது. பல்வேறு துறைகளில்

தலைமை வகித்த அனுபவம்…

          இதன் பின்னர், சமூக நலத்துறை இயக்குநர் உள்பட பல்வேறு துறைகளில் செயலர் பதவி மற்றும்தலைமைப் பொறுப்பையும் வகித்துள்ளேன். சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தேன். பல ஆண்டுகளாக தயாராகி வந்த சென்னை பெருநகரப்பகுதிகளுக்கான "2-வது மாஸ்டர் பிளான்' நான் பொறுப்பேற்ற சில மாதங்களில் அறிவிக்கப்பட்டது.இதனைச் செலயாக்கும் பொறுப்பும் மிகவும் சவாலாக இருந்தது.

 குடும்பத்தினர் குறித்து…

        கணவர் கே.ஏ. மேத்யுவும் ஐஏஎஸ். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பணி புரிந்த அவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். எங்களுக்கு இரண்டு மகன்கள். இருவரும் பொறியியல்படிப்பு முடிந்து அமெரிக்காவில் இருக்கின்றனர்.

ஐஏஎஸ் குறித்த பயம் வேண்டாம்…

             மற்ற பணிகளுக்குச் செலவது போல ஐஏஎஸ் பணிக்கு பெண்கள் அதிக எண்ணிக்கையில் வருவதில்லை என்ற குறைபாடு உள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன்ஒப்பிட்டுப் பார்க்கும் போது பெண்களிடம் இப்போது விழிப்புணர்வும் ஆர்வமும் வெகுவாகஅதிகரித்து வருகிறது.இருப்பினும், இன்னும் பெண்களிடம் ஐஏஎஸ் என்றாலே ஒருவித பிரமிப்பும் பயமும் உள்ளது.இது தேவையில்லாத ஒன்று, ஒரு குறிப்பிட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே ஐஏஎஸ்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான பாடத் திட்டத்தை (சிலபஸ்) தெரிந்து புரிந்துக் கொண்டு அதன்படி பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் யார் வேண்டுமானாலும் ஐஏஎஸ் ஆகமுடியும். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையே இதற்கு அடிப்படைத் தேவை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive