NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடுகளில் தனியாக இருப்போர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை

போலீஸ் அறிவுரை
        காவல் ஆய்வாளர் சிவக் குமார் கூறுகையில், "காலிங் பெல் அடித்தவுடன் கதவைத் திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதிசெய்ய வேண்டும். கதவில் லென்ஸ் அல்லது கதவை கொஞ்சம் மட்டும் திறக்கும் சங்கிலி வைப்பது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களை அனு மதிக்க
வேண்டாம். மரக் கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவு அமைப்பது கூடுதல் பாதுகாப்பு.

      தனியாக இருந்த பெண்ணிடம், ‘உங்கள் கணவரின் நண்பர் நாங்கள், திருமண பத்திரிகை கொடுக்க வந்துள்ளோம்என்று கூறி உள்ளே நுழைந்து கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.
 
          மின்சாதனப் பொருட்கள், குழாய் உள்ளிட்டவற்றை சரி செய்ய தனியாக இருக்கும்போது யாராவது வந்தால் அவர்களை பிறகு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுங்கள். போனில் சத்தமாக பேசக் கூடாது. வெளி யிடங்களுக்கு செல்லும்போது, புதிய நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல் லவே கூடாது. அறிமுகம் இல்லாதவர் களிடம் பேசும்போது, வீட்டில் யாரும் இல்லை, தனியே இருக் கிறேன் என்று சொல்ல வேண்டிய சமயங்களில், இன்னொருவர் தூங்கிக் கொண்டோ, குளிய லறையிலோ இருப்பதாகச் சொல் வது நல்லது. வாசலில் நிற்பவர் களை பார்க்க முடியாதபடி இருக்கும் வீடுகளில் கதவைத் திறக்காமல் பேசுவது நல்லது. அறிமுகம் இல்லாதவர்கள் நம்மைப்பற்றி எப்படி நினைத் தாலும் அது நம்மைப் பாதிக்கப் போவதில்லை.


ஒவ்வொரு வீட்டிலும் தனி யாக வசிக்கும் பெண்கள், வயதா னவர்கள் அருகிலுள்ள போலீஸ் நிலைய எண், தீயணைப்புத்துறை எண், அவசர போலீஸ் எண் மற்றும் தங்களுக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளின் எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதியோ அல்லது போனில் ஸ்பீடு டயலில் பதிவு செய்தோ வைத்திருக்கலாம். பேப்பரில் எழுதி சுவரிலும் ஒட்டலாம். பெப்பர் ஸ்பிரே போன்ற எளிதாக பயன் படுத்தும் வகையிலான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வீட்டில் வைக்க வேண்டும்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive