மத்திய
பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானது. மொத்தம் 11 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 49.7 சதவீத
மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 50.3 சதவீத மாணவர்கள்
தேர்வில் தோல்வியடைந்துள்ளனர்.
கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்ந்து வருகிறது. 2011-ம் ஆண்டு 55 சதவீதம் பேரும், 2012-ல் 51.19 சதவீதம் பேரும், 2013 மற்றும் 14-ம் ஆண்டுகளில் 47.74 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர்.

1-ம்
வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடையச் செய்வதாலே
10-ம் வகுப்பில் இவ்வளவு பேர் தோல்வியடைவதாக ஆசிரியர்கள் குறை
கூறுகிறார்கள். மோசமான தேர்வு முடிவுகளின் எதிரொலியாய், மத்திய
பிரதேசத்தில் 50 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் 60
ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் தினசரி சம்பள அடிப்படையில் வேலை செய்வதும்
குறிப்பிடத்தக்கது.

சரியான முறையில் தேர்வுகளை நடத்தினால் இங்கயும் அவ்வளவு தாங்க வரும்...
ReplyDelete