NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே தின நல்வாழ்த்துக்கள் -மே தின வரலாறு......

தொழிலாளர் போராட்டம்

         க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழி லில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர் கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்ட த்தை நடத்தினர். 1834இல் ஜனநாய கம் அல்லது மரணம் என்ற கோஷத் தை முன் வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவ டைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டி டத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலா ளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரி க்கையை முன் வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

முதல் மே நாளின் போது உருசியா வில் ஒட்டப்பட்ட சுவரொட்டி
சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப் பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்க ள் நடை பெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத் தில், ரஷ்யத்தொழிலாளிகளின் நிலை மை குறித்து விரிவாக அலசிய தோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளா தார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண் டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழி லாளி களின் 8 மணி நேர வேலை க்கான போராட்டங்களே ரஷ்யப் புரட் சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில் . . .

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணி யாற்றிய தச்சுத் தொழிலா ளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பில டெல்பியாவிலும், பென்சில் வேனியாவிலும் இதே கோரி க் கையை முன்வைத்து இயக் கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழி லாளர்களும் குறைவான வேலை நேரத் தை வலியுறுத்தி 1877 இல் வேலை நிறு த்தத்தில் ஈடுபட் டனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களில் உள்ள தொழி லாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்ட மைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொட ர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத் தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமேமே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந் தது.
தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில் விக்கி, சின்சினாட்டி, பால்டி மோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழி லாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங் கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200 க்கும் மேற் பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழி லாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத் தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வே லை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கிய து. மிச்சி கனில் மட்டும் 40,000 தொழி லாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிர த்தி ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று “மெக்கா ர்மிக் ஹார் வஸ்டிங் மெஷி ன் நிறுவனத்தின்” வாயி லில் 3000-க்கும் மேற்பட்ட தொ ழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத் தினர். இங்கு இடம் பெற்ற கலவரத்தில் 4 தொ ழிலாள ர்கள் காவல் துறை யினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலி யாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலா ளர்கள். 2500 தொழிலாளர்கள் கல ந்து கொண்ட கண்டனக்கூட்டம் அமைதியான முறையில் நடை பெற்றது. இந் நேரத்தில் காவல் துறையினர் அனை வரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ் வேளையில் திடீரெ ன்று கூட்ட த்தில் வெடிகுண்டு வீசப் பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல் துறையினர் பலியானார். பின் னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப் பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரை த் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவ ர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழ க்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப் பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொ ழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல் பேர்ட் பார்ச ன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர் ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக் கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெ ரிக்க தேசமே அணி திரண் டது. நாடு முழுவதும் 5 லட் சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத் தில் கலந்து கொண்டதோடு,அமெரிக்கா முழு வதும் கறுப்பு தினமாக அனு ஷ்டிக் கப்பட்டது.
அமெரிக்க தொழிலாள ர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகி களின் தியாகமும்தான் இன் றைக்கு மே தினமாக – உழை ப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வ தேச தொழிலாளர் பாராளு மன் றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட் டத்தில் பங்கே ற்றனர். பிரெட் ரிக் ஏங்கெல்ஸ் உட் படப் பலர் கலந்து கொண்ட இக்கூட் டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன் னெடுத்துச் செல்வது என்றும், சிக்கா கோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்த தோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங் களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப் பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive