Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் வரி விகிதத்தை குறைக்கவும் உயர்மட்ட குழு பரிந்துரை.

       வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.

உயர்மட்ட குழு
வருமான வரி சட்டங்களில், சில உட்பிரிவுகள், இரண்டு அர்த்தங்களைத் தரும் வகையில் இருப்பதால், பல்வேறு வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே, அத்தகைய உட்பிரிவுகளை ஆய்வு செய்து, அவற்றை எளிமைப்படுத்துவது குறித்து சிபாரிசு செய்வதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையிலான உயர்மட்ட குழுவைகடந்த ஆண்டு அக்டோபர் 27–ந் தேதி மத்திய அரசு நியமித்தது.அக்குழுவின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். முதல்கட்ட சிபாரிசுகளை ஜனவரி 31–ந் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அக்குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, தனதுமுதல்கட்ட சிபாரிசுகள் அடங்கிய 78 பக்க வரைவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் 25–க்கும் மேற்பட்ட சிபாரிசுகளை தெரிவித்துள்ளது.இந்த சிபாரிசுகள் பற்றி பொதுமக்கள் 23–ந் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம். அதன்பிறகு, அக்குழு தனது அறிக்கையை 31–ந் தேதிக்குள் இறுதி செய்யும்.வரம்பை உயர்த்த வேண்டும்முக்கிய சிபாரிசாக, மூலத்தில் பிடித்தம் செய்யப்படும் வரிக்கான (டி.டி.எஸ்.) வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதுபற்றிஅறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–தனிநபர் வருமான வரி வசூலில் 65 சதவீத தொகை, டி.டி.எஸ். வரி மூலமாகவே கிடைக்கிறது. அத்தகைய வரி, மிகவும் நேசிப்புக்குரியதாக இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இருப்பதுபோல, வெறுப்புக்கு உரியதாக இருக்கக்கூடாது.டி.டி.எஸ். வரி பிடித்தம் செய்யப்படுவதற்கான நுழைவு வரம்பு, நீண்ட காலமாக உயர்த்தப்படவில்லை. அதை கணிசமாக உயர்த்த வேண்டும்.

கடன் பத்திரம்
உதாரணமாக, கடன் பத்திரங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள் ஆகியவை மூலம் கிடைக்கும் வருடாந்திர வட்டி, ரூ.2,500 ஆக இருந்தாலே, தற்போது டி.டி.எஸ். வரி வசூலிக்கப்படுகிறது. இனிமேல், இத்தகைய திட்டங்களில் கிடைக்கும் வட்டி, ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் இருந்தால்தான் டி.டி.எஸ். வசூலிக்க வேண்டும்.தற்போது, தனிநபர் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி, தரகு கூலி ரூ.5 ஆயிரம் இருந்தாலும், வங்கி வட்டியில் கிடைக்கும் வருமானம் ரூ.10 ஆயிரம் இருந்தாலும் டி.டி.எஸ். வசூலிக்கப்படுகிறது. இனிமேல், இவற்றுக்கு ரூ.15 ஆயிரம் வருமானம் இருந்தால்தான் டி.டி.எஸ். வசூலிக்க வேண்டும்.வாடகை வருமானம்காண்டிராக்டர்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.30 ஆயிரம் கிடைத்தாலே டி.டி.எஸ். வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கிடைத்தால்தான் வசூலிக்க வேண்டும்.தொழிற்சாலை, எந்திர சாதனங்கள், நிலம், கட்டிடம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தாலே டி.டி.எஸ். வசூலிக்கப்பட்டது. இதை ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தொழில் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.30 ஆயிரம் இருந்தாலே டி.டி.எஸ். வசூலிக்கப்பட்டது. அதை ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். அதே சமயத்தில், அவர்களுக்கு டி.டி.எஸ். வரி விகிதம் 10 சதவீதமாக நீடிக்க வேண்டும்.
வரி விகிதம் குறைப்பு
மற்றபடி, தனிநபர்களுக்கும், இந்து கூட்டு குடும்பங்களுக்கும் டி.டி.எஸ். வரி விகிதம் தற்போதைய 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive