NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்:பிப்.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

          மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 484 சத்துணவு அமைப்பாளர், 463 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


          484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ரூ.2,500-5,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை ஒன்றியத்தில் 26 காலிப் பணியிடங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 23 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதேபோல, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 21, போளூர் ஒன்றியத்தில் 26, கலசப்பாக்கத்தில் 21, சேத்பட்டில் 24, செங்கத்தில் 28, புதுப்பாளையத்தில் 27, தண்டராம்பட்டில் 22, ஜவ்வாதுமலையில் 19, செய்யாறில் 33, அனக்காவூரில் 26, வெம்பாக்கத்தில் 35, வந்தவாசியில் 26, தெள்ளாரில் 36, பெரணமல்லூரில் 33, ஆரணியில் 31, மேற்கு ஆரணியில் 15, திருவண்ணாமலை நகராட்சியில் 7, ஆரணி நகராட்சியில் 2, திருவத்திபுரம் நகராட்சியில் 3 என மொத்தம் 484 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 14 இடங்களும், ஆதிதிராவிடர்களுக்கு 73 இடங்களும், பழங்குடியினருக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 97 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 17 இடங்களும், முஸ்லிம் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 129 இடங்களும், பொதுப்பிரிவினருக்கு 149 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 2016 ஜனவரி 1-ஆம் தேதிப்படி 21 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வியடைந்தவர்களாக இருக்கலாம். இவர்களது வயது வரம்பு 2016 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவற்றுடன் பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி விண்ணப்பப் படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

463 சமையல் உதவியாளர் பணியிடங்கள்: இதேபோல, சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.950-2,000 என்ற ஊதிய விகிதத்தின் கீழ் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 26 காலிப் பணியிங்களும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 24 காலிப் பணியிடங்களும் உள்ளன. இதேபோல, துரிஞ்சாபுரத்தில் 27, போளூரில் 8, கலசப்பாக்கத்தில் 19, சேத்பட்டில் 23, செங்கத்தில் 40, புதுப்பாளையத்தில் 20, தண்டராம்பட்டில் 35, ஜவ்வாதுமலையில் 16, செய்யாறில் 23, அனக்காவூரில் 20, வெம்பாக்கத்தில் 41, வந்தவாசியில் 21, தெள்ளாரில் 32, பெரணமல்லூரில் 32, ஆரணியில் 28, மேற்கு ஆரணியில் 24, திருவண்ணாமலை நகராட்சியில் 3, ஆரணி நகராட்சியில் 1 பணியிடம் என மொத்தம் 463 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதில், அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு 13 இடங்கள், ஆதிதிராவிடர்களுக்கு 70 இடங்கள், பழங்குடியினருக்கு 5, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 93, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு 16, முஸ்லீம் தவிர இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 123, பொதுப்பிரிவினருக்கு 143 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தோல்வி அடைந்தவர்களாக இருக்கலாம். பழங்குடியினர் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive