Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி

        பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க அரசு வழங்கும் நிதியுதவியைப் பெற விண்ணப்பிக்கலாம்.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

  ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுப் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்கள், 3 மாணவியர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த 2 மாணவர்கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி படிக்க அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
 இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.28,000 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.56,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
 அதன்படி, தலா ஓராண்டுக்குக் கல்விக் கட்டணம் ரூ.8,000, பராமரிப்புக் கட்டணம் ரூ.3,650, விடுதிக் கட்டணம் ரூ.15,000 (விடுதியில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மட்டும்), சிறப்புப் பயிற்சிக் கட்டணம் ரூ.1,500 என மொத்தம் ரூ.28,150 அல்லது ரூ.28,000 வழங்கப்படும்.
 மாவட்டத்தில் தகுதியுடைய மாணவ, மாணவியர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




1 Comments:

  1. தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், அரசு பள்ளியில் சேர்ந்து படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை. (இப்படி தான் இருக்க வேண்டும் தலைப்பு).


    அரசு பள்ளி என்றால் கேவலம், இது நான் சொல்லவில்லை, மேலே உள்ள செய்தி சொல்கிறது.
    எப்படி, கஷ்டப்பட்டு மாணவர்களை மார்க் வாங்க வைப்பது அரசு ஆசிரியர், ஆனால் அதன் இறுது பலன்களை அனுபவிப்பது தனியார் பள்ளி. இதற்கு மேல் அரசு பள்ளியை அசிங்கபடுத்த தேவை இல்லை.

    Why should Govt give grant to students for joining private school. Actually Govt should give benefits for students who get good marks in SSLC from private school and are willing to join Govt school.

    Feeling ashamed of the Education system.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive