பத்தாம்
வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு, ஜூன், 20,
21ம் தேதிகளில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து,
தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில்
தேர்ச்சி பெறாதோர் மற்றும் அறிவியல் பாட பயிற்சி வகுப்பிற்கு, 80 சதவீதம்
வருகை புரிந்து, செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்கள், தனித்தேர்வராக
செய்முறைத் தேர்வில் பங்கேற்கலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள்,
ஜூன், 20, 21 தேதிகளில் நடக்கும் சிறப்பு துணைத் தேர்வுக்கான செய்முறைத்
தேர்வில் பங்கேற்கலாம். இது குறித்த முழு விவரங்களையும், சம்பந்தப்பட்ட
மாவட்ட கல்வி அலுவலரை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில்
தேர்வர்களின் வீட்டு முகவரிக்கு, இது குறித்து அறிவிப்பு அனுப்பப்படாது.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...