Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குவைத்தில் இன்ஜினீயர்களுக்கு வேலை: தமிழக அரசு நிறுவனம் அறிவிப்பு

இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.       இதுதொடர்பாக தமிழக அரசின் நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.சமயமூர்த்தி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய தொலைத்தொடர்புத்துறையின் குவைத் திட்டப்பணிகளுக்கு இன்ஜினீயர்கள் தேவைப்படுகிறார்கள்.

 இப்பணிக்கு பிஇ, பிடெக் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டதாரிகள், சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு பணிஅனுபவம் அவசியம். வயது 30-க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.56 ஆயிரம்.மேலும், சிவில் மேற்பார்வையாளர் பணிக்கு டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.30,200 வழங்கப்படும். பிளஸ் 2 அல்லது டிப்ளமா தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணிஅனுபவம் உள்ளவர்கள் பைபர் ஸ்பைலைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது 22 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.26,800.டிப்ளமா தேர்ச்சி பெற்றவர்கள் சிவில் ஆட்டோகாட் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,500. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு அனுபவத்துடன் குவைத் நாட்டின் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கனரக வாகன ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,750. மேலும், எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தொலைத்தொடர்புத்துறையில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் லேபர் பணிக்கு தேவைப்படுகிறார்கள். சம்பளம் ரூ.15,600. கூடுதல் விவரங்களை www.omcmanpower.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 3 ஆண்டு பணி ஒப்பந்த அடிப்படையில் தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இலவச இருப்பிடம்,இலவச மருத்துவம், மருத்துவக் காப்பீடு, மிகைநேர பணி ஊதியம் (ஓ.டி) மற்றும் குவைத் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.30 மாதங்கள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு உரிய தகுதி இருப்பின் தங்கள் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் மற்ரும் ஒருபுகைப்படத்தை omcresum@gmail.com என்ற இ-மெயில் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive