Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒருங்கிணைந்த எம்.எம்.எஸ். பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


ஒருங்கிணைந்த எம்.எம்.எஸ். பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2016-17-ஆம் கல்வியாண்டில், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் வணிகக் கல்வி பாடப் பிரிவில் பி.எம்.எஸ்.(Bachelor of Management Studies) மற்றும் எம்.எம்.எஸ்.(Master of Management Studies) ஆகிய பட்டப்படிப்புகள் கொண்ட ஒருங்கிணைந்த 5 ஆண்டுகால முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பட்டப்படிப்பில் வர்த்தகம், கணக்கியல், மேலாண்மை, பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், கணினி பயன்பாடு, சட்டம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். 2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் குறைந்தபட்சம் 50 சத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். 3 ஆண்டுகளிலும் படிப்பை நிறுத்திக் கொள்ளலாம். 5 ஆண்டுகள் தொடர விரும்பினாலும், அதற்கும் வாய்ப்புள்ளது.
 விண்ணப்பப் படிவங்களை பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள சென்ட்ரல் கல்லூரியின் பிரசாரரங்கா மையத்தில் ரூ.400-க்கான வங்கி வரைவோலையைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.bangaloreuniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இணையதளத்தில் தரவிறக்கம் செய்தவர்கள் விண்ணப்பப் படிவத்தை கட்டணத்துக்கான வரைவோலையுடன் ஒருங்கிணைப்பாளர், வணிக கல்வித் துறை, பழைய சட்டக் கல்லூரி வளாகம், பெங்களூரு பல்கலைக்கழகம், அரண்மனை சாலை, பெங்களூரு-560009 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூன் 24-ஆம் தேதிக்குள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961965, 22961964, 22961956 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive