வங்க கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு பின், கரையை கடக்கும்

       வங்க கடலில் உருவாகியுள்ள, 'நடா' புயல், கடலுார் அருகில், இன்று நள்ளிரவுக்கு பின், கரையை கடக்கும் எனவும், காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும், தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

       இதனால், ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு, இன்று முதல், இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும், எதிர்பார்த்த மழையை தராமல், நீர் நிலைகள் வறண்டு விட்டன. நிலத் தடி நீர் மட்டம் சராசரியாக, 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. அதனால், மழை வருமா; வளம் தருமா என, மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், வங்க கடலின் தென் கிழக்கில், இலங்கை அருகில், நான்கு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நேற்று காலை புயலாகவும் மாறியுள்ளது. இந்த புயலுக்கு, 'நடா' என, அரபு மொழி பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சூறாவளி

இது குறித்து, இந்திய வானிலையின் புயல் ஆய்வு மைய விஞ்ஞானி, நரேஷ் குமார், சென்னை புயல் எச்சரிக்கை மைய இயக்குனர், எஸ்.பாலச்சந்திரன் ஆகியோர் வெளியிட்ட எச்சரிக்கை:

நேற்று பகல், 12:00 மணி நிலவரப்படி, வங்க கடலில், இலங்கையின் திரிகோணமலையிலி ருந்து, வட கிழக்கில், 350 கி.மீ., துாரத்திலும்; சென்னையில் இருந்து தென் கிழக்கில், 590 கி.மீ., துாரத்திலும்; புதுச்சேரியிலி ருந்து தென் கிழக் கில், 560 கி.மீ., துாரத்திலும், புயல் நகர்ந்து கொண்டிருந்தது. மணிக்கு, 30 கி.மீ., வேகத்தில், கரையை நோக்கி புயல் வந்து கொண்டிருக்கிறது.

இந்த புயல் இன்னும் வலுப்பெற்று, 2ம் தேதி அதிகாலையில், அதாவது, இன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு பின், வடக்கு கடலோர பகுதியில், கடலுார் அருகில், வேதாரண்யம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே, அதிக பட்சம், 90 கி.மீ., வேகத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. 

கடலில், 35 முதல், 45 நாட்டிகல் மைல் சுற்றள வுக்கு, சூறாவளி காற்று இருக்கும். தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், கடலோரம் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், இன்று முதல் காற்றுடன் கூடிய மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில், இன்று அதிகாலை முதல், 65 கி.மீ., வேகத்தில் சூறா வளி காற்று வீச வாய்ப்புள்ளது. 

கடலில், உயரமான அலைகள் எழும்; கொந்தளிப் பாக இருக்கும். எனவே, கடலோர மாவட்டங் களில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை,அரசுத் துறைகள் மேற்கொள்ள வேண்டும். , இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

தேர்வுகள் ரத்து

புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகப்பட்டி னம என, ஐந்து மாவட்டங்களிலும் பள்ளி களுக்கு, இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், வானுார், மரக் காணம் தாலுகா பள்ளிகளுக்கும் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு கல் லுாரிகளில், இன்று நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. புயல் பாதிப்பில் இருந்து தப்ப, மக்கள் முன்னெச்சரிக் கையுடன் இருப்பது நல்லது.

பாதிக்கப்படும் பகுதிகள்

புயல் நேரடியாக தாக்க வாய்ப்புள்ள பகுதிகளை, இந்தியபுயல் முன் எச்சரிக்கை மையம் 
பட்டியலிட்டுள்ளது.
*கடலுார் மாவட்டம்: குமரப்பேட்டை, மாதவ பள்ளம், பூச்சிமேடு, திருச்சேபுரம், தம்மம் பேட்டை, ரெட்டியார் பேட்டை, நொச்சிக்காடு, ராசாப்பேட்டை, சோத்திக்குப்பம், கடலுார், புதுக்குப்பம், மணப்பேடு, பிச்சாவரம், முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை.
* நாகை மாவட்டம்: சுனாமி நகர், வழுத்தலைக்குடி
* விழுப்புரம் மாவட்டம்: சோலை நகர் (புதுச்சேரி அருகில்)
* புதுச்சேரி: புதுக்குப்பம், சின்ன வீர்மா பட்டினம், புதுச்சேரி

Share this