Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரிலைன்ஸ் ஜியோவின் புதிய 4G போன் - ரூ.1500!

       ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் மிகக்குறைந்த விலையில் வோல்ட் (VoLTE - Voice over Long-Term Evolution) எனப்படம் புதிய 4G மொபைல் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

          இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், தொலைத்தொடர்பு துறையில் புதுப்புது ஆச்சர்யங்களை வழங்கிவருகிறது. ரிலைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி இன்டர்நெட், கால், என அனைத்து சேவைகளும் இலவசம் என்கிற அதிரடி அறிவிப்புடன் ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தியது. வெல்கம் ஆபர் என்று பெயரிடப்பட்ட அந்த சலுகைகள் டிசம்பர் 31 வரை தொடர்ந்தன. பிறகு ஹாப்பி நியூ இயர் ஆபரை அறிமுகப்படுத்தி அந்த சலுகையை மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது ரிலைன்ஸ் ஜியோ. இந்நிலையில் தற்போது, மிகவும் மலிவாக 1500 ரூபாய்க்கு வோல்ட் (VoLTE - Voice over Long-Term Evolution) எனப்படும் புதிய 4G மொபைல் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. மலிவான விலையில் 4G போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொலைத்தொடர்பு துறையில் மேலும் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்க ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 65 சதவிகிதத்தினர் சாதாரண போனையே பயன்படுத்துகிறார்கள். அதிக விலை மற்றும் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களால் 4G போன் பயன்பாடு குறைவாக உள்ளது. இதனை கருத்தில்கொண்டு ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,500 க்கு 4G போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், அதிவேக 4G இன்டர்நெட் வசதி, முன் பக்க கேமரா, ஜியோ சாட், லைவ் டிவி, மற்றும் பணப்பரிவர்த்தனை செயலியான ஜியோ மணி வாலெட் போன்ற சிறப்பம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலிவான 4G போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive