NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவை தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி!!

ஒரே நேரத்தில் தேர்தல்

      பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.       மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு தனது ஆதரவை தெரிவித்தது.
 
          இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வசதிவாய்ப்புகள் குறித்து தேர்தல் கமிஷனிடம் சட்ட கமிஷன் கருத்து கேட்டது. அப்போது தேர்தல் கமிஷன் தனது பதில் அறிக்கையில், இப்படி ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமென்றால், அதற்கு ரூ.9 ஆயிரம் கோடி தேவைப்படும் என தெரிவித்தது.

2 முக்கிய நிபந்தனைகள்

இந்த நிலையில், 7-வது தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, டெல்லியில் நேற்று இளைய, எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குதலுக்கான உத்திகள் பற்றி கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்குக்கு மத்தியில் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் 2 முக்கிய நிபந்தனைகள் உள்ளன.

ஒன்று, அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மின்னணு ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தமட்டில் அவற்றை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை.

தேர்தல் கமிஷனின் கருத்துகள், சட்ட அமைச்சகத்துக்கும், பாராளுமன்ற நிலைக்குழுவுக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தம் எதற்காக?

பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்குத்தான் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் கூறுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive