நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்' நுழைவுத் தேர்வை ரத்து
செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் மாணவர்கள் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத் திட்டம்,
மெட்ரிக் பாடத் திட்டம் போன்ற பல்வேறு பாடத் திட்டங்களில் படிக்கின்றனர்.
ஆனால் நீட் தேர்வில் சிபிஎஸ்இ, என்சிஆர்டி ஆகிய பாடத் திட்டத்தின்
அடிப்படையில் மட்டுமே கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால் பிற
பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவர்.
குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர
முடியாத சூழல் ஏற்படும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...