NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உடனே நீக்க வேண்டிய ஐந்து ஆப்ஸ்கள்

        உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உடனே நீக்க வேண்டிய ஐந்து ஆப்ஸ்கள் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் உடனடியாக நீக்க வேண்டிய ஐந்து ஆப்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 ஸ்மார்ட்போன்கள் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஒரு மொபைல் போன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மாறிவிட்டது. இந்நிலையில் தற்போது வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் ஏராளமான பேசிக் அம்சங்கள் இருந்தாலும் கூடுதல் வசதிக்காக நாம் பல ஆப்ஸ்களை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து வருகிறோம். அதே நேரத்தில் நாம் டவுன்லோடு செய்யும் ஒருசில தேவையில்லாத ஆப்ஸ்கள் நம்முடைய ஸ்மார்ட்போனை பாதிக்கின்றது என்ற உண்மையை நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா?
 ஆம் ஒரு ஸ்மார்ட்போன் பேட்டரி லைப் குறைந்தாலோ, மெதுவாக வேலை செய்தாலோ, அடிக்கடி ஹேங் ஆனாலோ, தேவையில்லாத ஆப்ஸ்கள் நமது ஸ்மார்ட்போனில் அதிகம் உள்ளது என்பதும் ஒரு காரணம்.  உடனடியாக அத்தகைய ஆப்ஸ்களை கண்டறிந்து அதை அன்இன்ஸ்டால் செய்து நீக்கிவிட்டால் மேற்கண்ட பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம். குறிப்பாக ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் உடனடியாக நீக்க வேண்டிய ஐந்து ஆப்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 பேட்டரியை மிச்சப்படுத்தும் ஆப்ஸ்கள்: 
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு போனிலும் முதலில் தவிர்க்க வேண்டியது பேட்டரி சேவிங் ஆப்ஸ்கள். கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏராளமான பேட்டரி சேவிங் ஆப்ஸ்கள் குவிந்துள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலான ஆப்ஸ்கள் அதன் வேலையை முறையாக செய்வதில்லை. விரல்விட்டு எண்ணும் அளவிற்கு ஒருசில பேட்டரி சேவிங் ஆப்ஸ்களே நன்றாக வேலை செய்கிறது. எனவே இதுபோன்ற ஆப்ஸ்களை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோடு செய்திருந்தால் உடனடியாக யோசிக்காமல் நீக்கிவிடவும். 
ஒரு போனில் உள்ள பேட்டரியை சேமிக்க உண்மையிலே மிகச்சிறந்த வழி, தேவையான போது மட்டும் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்துவது மட்டுமே.
 ஆண்ட்டி வைரஸ் ஆப்ஸ்கள்: 
நம்முடைய ஸ்மார்ட்போனில் ஏதாவது டவுன்லோடு செய்யும்போது வைரசும் சேர்ந்து வந்துவிடும் என்ற பயத்தில்தான் பெரும்பாலானோர் ஆண்ட்டி வைரஸ் ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்து வைத்துள்ளனர். ஆனால் தற்போது வரும் அதிநவீன ஸ்மார்ட்போன்களில் அந்த போனில் உள்ள ஆபரேட்டிங் சிஸ்டமே நல்ல ஆண்ட்டி வைரஸாகவும் உள்ளது. எனவே இதற்கென தனியாக ஒரு ஆண்ட்டி வைரஸ் ஆப்ஸ் தேவையில்லை. 
மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீங்கள் ஆப்ஸை டவுன்லோடு செய்தாலும், கூகுள் ப்ளே ஸ்டோரே ஆண்ட்டி வைரசாக செயல்பட்டு அதன்பின்னர் தான் உங்கள் ஆப்ஸை டவுன்லோடு செய்ய அனுமதிக்கின்றது. எனவே ஒரு ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்டி வைரஸ் ஆப்ஸ்கள் தேவையில்லை என்பதே பலரது கருத்து. 
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இல்லாமல் இண்டர்நெட்டில் இருந்து APK பைல்களை டவுன்லோடு செய்தால் மட்டுமே ஆண்ட்டி வைரஸ் ஆப்ஸ் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  
 க்ளீன் மாஸ்டர் ஆப்ஸ்: 
ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் அனைவருமே கிட்டத்தட்ட இந்த க்ளின் மாஸ்டர் ஆப்ஸ் ஒன்றை வைத்திருப்பார்கள். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு செயல். ஆனால் கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இது ஒரு தேவையில்லாத ஆப்ஸ். 
ஏனெனில் ஒரு க்ளீன் மாஸ்டர் செய்யும் வேலையை ஒருசில நொடிகளில் நம்முடைய போனில் உள்ள செட்டிங்ஸில் செய்துவிடலாம். உங்கள் ஆண்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் சென்று அதன் பின்னர் Storage → Cache Data சென்று பின்னர் clear the same என்று கொடுத்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள Cache Data அனைத்தும் டெலிட் செய்யப்படும். 
இந்த முறையை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் செய்தாலே உங்கள் போன் பாதுகாப்பாகிவிடும். இதற்கென தனியாக க்ளீன் மாஸ்டர் ஆப்ஸ் தேவையில்லை. 
ரேம் சேவிங் ஆப்ஸ்: 
ஒரு ஆண்ட்ராய்டு ஓஎஸ் உள்ள போனுக்கு ரேம் சேவிங் ஆப்ஸ் என்பது தேவையில்லாத ஒன்று. நம்முடைய ஆண்ட்ராய்டு போனில் உள்ள ரேமில் உள்ள விஷயங்களை அவ்வப்போது மெமரியை பூஸ்ட் செய்வதன் மூலம், பேக்ரவுண்டில் உள்ள ஆப்ஸ்களை நீக்கிவிடுவதன் மூலமும், போனை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் ரேம்-ஐ சேவ் செய்யலாம். 
இதற்கென தனியாக எந்த ஒரு ஆப்ஸும் கண்டிப்பாக தேவையில்லை இந்த ஆப்ஸும் உங்களுக்கு தேவையில்லை. பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ஏற்கனவே ஒருசில ஆப்ஸ்கள் இன்ஸ்டால் செய்தே வந்திருக்கும். இவற்றில் ஒருசில ஆப்ஸ்கள் நமக்கு தேவையாக இருக்கலாம். ஆனால் ஒருசில ஆப்ஸ்கள் நமக்கு சம்பந்தமே இல்லாமல் இடத்தை அடைத்து கொண்டிருக்கும். இப்படிப்பட்ட ஆப்ஸ்களை நீங்கள் எளிதில் அன் இன்ஸ்டால் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தை அதை டீ-ஆக்டிவேட் செய்ய முடியும். அவ்வாறு செய்துவிட்டால் உங்கள் போன் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நீண்ட நாள் உழைக்கும்




2 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive