Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோரை நாடும் ஆசிரியர்கள்

         குரோம்பேட்டை:அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து, பள்ளிக்கு சரியாக வராமல், வேலைக்கு செல்லும், ௧௦ம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களின், பெற்றோரை தேடி செல்லும் முயற்சியில்,ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.

        அஸ்தினாபுரத்தில், பல்லாவரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 583 பேர் படிக்கின்றனர், 25 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 40 சதவீதம் மாணவர்கள், கூலி தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் இப்பள்ளியின், ௧௦ மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது.
கடந்தாண்டு முறையே, 97, 92 சதவீதம் இருந்தது. இவ்வாண்டு, 100 சதவீதம் தேர்ச்சிக்காக, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தினமும் காலை, 8:௦௦ முதல், 9.30 மணி வரையும், மாலை, 4.15 முதல், 5.45 மணி வரையும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இருப்பினும், பல மாணவர்கள் படிப்பு மீது ஆர்வமும், அக்கறையும் இல்லாமல் உள்ளனர்.
கூலி தொழிலாளர் குடும்பத்தில், கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால், குழந்தைகள் பள்ளி சென்றார்களா, இல்லையா என்பதை, சரியாக கண்காணிக்க முடிவதில்லை. இதனால், சில மாணவர்கள் பள்ளிக்கு, 'கட்' அடித்துவிட்டு, வேலைக்கு செல்கின்றனர்.இந்நிலையில், அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து, 10ம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், பள்ளிக்கு சரியாக வராமல், வேலைக்கு செல்லும் மாணவர்களின் வீட்டிற்கு சென்று, பெற்றோரை, சந்தித்து பேச, ஆசிரியர்கள்திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம், கல்வியின்அவசியத்தை எடுத்து கூறி, மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதற்கான முயற்சியில், ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive