Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2019 மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பயன்படுத்தப்படும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

🔸 உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

🔹 இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன.


🔸 மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதால், இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

🔹 இந்நிலையில், வருகின்ற 2019 மக்களவை தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும், ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

🔸 இதற்காக, மத்திய அரசு 3,173 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

🔹 எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

🔸 யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வரும் இயந்திரம், கடந்த சட்டசபை தேர்தலில் சில வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் ஒப்புகைச் சீட்டு வரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive