NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதி அக்.31க்குள் புதுப்பிக்க வாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 350 தபால் நிலையங்களில் காலாவதியாகி விட்ட 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளை வரும் அக்., 31க்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளை போல் அஞ்சலகங்களிலும் அஞ்சலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு வரையிலான அஞ்சலக கால வைப்பு நிதி, அஞ்சலக தொடர் வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 'பொன் மகன்' பொது வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி கணக்கு வைப்பு திட்டத்ததில் 'செல்வ மகள்' சேமிப்பு திட்டம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் ஆகிய 9 சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.20 செலுத்தி சேமிப்பு கணக்கை துவங்கலாம். சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த ஆண்டு அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் ரூ.20
ஆயிரத்து 737 கோடியே 29 லட்சம் வசூலானது. இதில் பொதுமக்களுக்கு திரும்ப கொடுத்த தொகை 17 ஆயிரத்து 227 கோடியே 19 லட்சமாகும்.
அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் தொடர்ந்து 3 ஆண்டு முதலீடு செய்து வந்தால், கடன் பெறும் வசதி உள்ளது. அதேபோல் தொடர்ந்து 3 ஆண்டு பணம் செலுத்தவோ, எடுக்கவோ
இல்லாமல் இருந்தால், அந்த சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதியாகி விடும். அத்தகைய
கணக்குகளில் ஏற்கனவே இருந்த தொகையை திரும்ப எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. காலாவதியான
சிறுசேமிப்பு கணக்குகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள அஞ்சல்துறை புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சிவநாதன் கூறியதாவது:
மத்திய அரசு எடுத்த பணமதிப்பு குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு பொதுமக்கள் அஞ்சலக சேமிப்புகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை பெண்களே
இத்திட்டத்தில் அதிகளவு உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 350 தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதியாகி விட்டன. அவற்றை வரும் அக்., 31 வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை புதுப்பிக்காதவர்கள் அருகிலுள்ள அஞ்சலகங்களையோ, சிறுசேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அஞ்சலகங்களையோ தொடர்பு கொண்டு புதுப்பித்து கொள்ளலாம் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive