மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு

நாடு முழுவதும் உள்ள, 1.1 கோடி மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.ஏழாவது சம்பள கமிஷன் அறிமுகத்துக்கு பின், அகவிலைப் படி நிர்ணயம் செய்வதற்கு புதிய முறை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. 

இதை அடிப்படையாக வைத்து, இந்தாண்டு மார்ச்சில், 2 சதவீதத்தில் இருந்து, 
4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியதாரருக்கான அகவிலைப் படியை, 1 சதவீதம் உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தாண்டு, ஜூலை, 1 முதல் கணக்கிட்டு, இது வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள, 49.26 லட்சம் அரசு ஊழியர், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர் பயனடைவர்.

Share this

0 Comment to " மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...