இரத்த தானம் செய்தால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்… தொழிலாளர் நலவாரியம் அறிவிப்பு…

ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர் நலவாரியம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் இரத்த தானம் செய்யும் நாளன்று ஊதியத்தோடு விடுப்பு அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் அதிகபட்சமாக 4 நாட்கள் ரத்ததானம் செய்ய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தொழிலாளர் நலவாரியம் கூறியுள்ளது.இரத்தம் கொடுத்ததற்கான அங்கீகரிக்கப்பட்ட வங்கிககளின் சான்றினை சமர்ப்பித்தால், மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share this