தாஜ்மஹால்: அமலுக்கு வந்த புதிய திட்டம்!!!

தாஜ்மஹாலைக் காண இன்று (ஜனவரி 20) முதல்  நாள்தோறும் 40,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மஹால், ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது. முகலாய மன்னரான ஷாஜகான், இறந்துபோன தன் மனைவி மும்தாஜின் நினைவாக இதைக் கட்டியதால், இது காதலின் சின்னமாகக் கருதப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகள் (1632 முதல் 1653 வரை) 22,000 பணியாட்களைக் கொண்டு பளிங்குக் கற்களால் கட்டிமுடிக்கப்பட்டது.

தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். தினமும் சராசரியாக 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் பேர் வரை தாஜ்மகாலைப் பார்த்துச் செல்கின்றனர். தினமும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் சுற்றுச்சூழல் மாசு உருவாகி தாஜ்மகாலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருவதாகக் கூறப்பட்டது. மேலும் காற்று மாசின் காரணமாக தாஜ்மஹாலின் நிறம் மாறிவிட்டதாகப் புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தினமும் 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே தாஜ்மஹாலைப் பார்ப்பதற்கு அனுமதிக்க வரையறுக்கப்பட்ட திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Share this

0 Comment to "தாஜ்மஹால்: அமலுக்கு வந்த புதிய திட்டம்!!! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...