நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் இரண்டாவது கோள் சுக்கிரன் (Venus) பற்றி:
1. வானத்தில் நிலவுக்கு அடுத்ததாகப் பிரகாசமான பொருள், சுக்கிரன்.
2. சுக்கிர கிரகத்தின் மேற்பரப்பு முழுவதும் கந்தக அமிலத்தாலான மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன.
3. சுக்கிரன் கோளுக்கு நிலவுகளோ, வளையங்களோ கிடையாது.
4. சுக்கிரனின் விட்டம் ஏறத்தாழ 12,104 கிமீ.
5. சுக்கிரனில் ஒரு நாள் என்பது 117 பூமி நாட்கள்.
6. சுக்கிரனின் மேற்பரப்பு வெப்பநிலை 471°C
7. மற்ற எல்லாக் கோள்களும் சுற்றும் திசைக்கு எதிர்த்திசையில் சுற்றுகிறது, சுக்கிரன்.
8. நம் சூரியக் குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள், சுக்கிரன்.
9. சுக்கிரனைச் சுற்றி 96.5% கரியமில வாயு இருப்பதால், வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
10. சுக்கிரனின் மேற்பரப்பு முழுவதும் இரும்பு, பாறை, சிலிக்கேட் ஆகியவற்றால் ஆனது.
- ஆஸிஃபா
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...