அறிவியல் -அறிவோம்: வானவில்லில் எத்தனை நிறங்கள்?உண்மையறிவோம்.

வானவில்லில் எத்தனை நிறங்கள்?உண்மையறிவோம்.


மழைத் துளிகளின் உள்ளே சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்லும்போது வானவில் தோன்றுகிறது. வானவில்லில், ஊதா (Violet), கருநீலம் (Indigo), நீலம் (Blue), பச்சை (Green), மஞ்சள் (Yellow), ஆரஞ்சு (Orange), சிவப்பு (Red) ஆகிய ஏழு நிறங்கள் உள்ளன. இதை நினைவில் வைத்துக் கொள்ளச் சுருக்கமாக 'விப்கியார்' (VIBGYOR) என்கிறோம். வானவில்லில் ஏழு நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர் ஐசக் நியூட்டன் (Isaac Newton). இவை எல்லாமே உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள்தான். 
 
வானவில் எப்போதும் ஏழு நிறங்களோடுதான் தோன்றும் என்பதில்லை. காலை, மாலை வேளைகளில் தோன்றும் வானவில்லில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் மட்டுமே தோன்றும். ஊதா, கருநீலம், நீலம், பச்சை ஆகிய நிறங்கள் தோன்றாது. 
 
பன்னிரண்டு வெவ்வேறு வகையிலான வானவில்கள் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஃபிரான்ஸ் நாட்டு வானிலை ஆய்வு மையத்தைச் (நேஷனல் மீடியோரோலாஜிகல் ரிசர்ச் சென்டர் - National Meteorological Research Center) சேர்ந்த 'ஜீயான் ரிகார்' (Jean Ricard) என்ற வளி மண்டல அறிவியலாளர் (அட்மாஸ்பெரிக் சைன்டிஸ்ட் - Atmospheric Scientist) இதைக் கண்டுபிடித்து இருக்கிறார். 
வானவில்லில் நிறங்கள் தெளிவாகத் தெரிவது மழைத் துளிகளின் அளவைப் பொறுத்தது. அதன் நிறங்களை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிப்பது தொடுவானத்துக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம்தான். 
சூரியன் தொடுவானத்துக்கு மிகவும் அருகில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு நிறம் மட்டுமே காணப்படும். தொடுவானத்திலிருந்து சூரியன் சற்று மேலே, எழுபது டிகிரி கோணத்தில் இருக்கும்போது தோன்றும் வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்களும் தோன்றுகின்றன.

(S.HARINARAYANAN)


Share this

0 Comment to "அறிவியல் -அறிவோம்: வானவில்லில் எத்தனை நிறங்கள்?உண்மையறிவோம்."

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...