Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.07.19

திருக்குறள்


அதிகாரம்:அருளுடைமை

திருக்குறள்:244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

விளக்கம்:

எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்.

பழமொழி

Idleness is the root of all evils.

தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.

இரண்டொழுக்க பண்புகள்

1. என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.

2. இயற்கை சமநிலையை பேணிபாதுகாப்பேன். அதற்காக என் பங்களிப்பை செலுத்துவேன்.

பொன்மொழி

ஆசைகள் ஒருவரை ஆட்கொள்ளும் தருணத்தில் தான் அவரது துன்பங்கள் தொடர ஆரம்பிக்கிறது.....

------- கௌதம புத்தர்

பொது அறிவு

1. நோபல் பரிசும் பாரத ரத்னா விருதும் பெற்ற முதல் இந்தியர் யார் ?

சர் .சி .வி .ராமன்

2. பாரத ரத்னா, பத்ம விபூஷன் ஆகிய இரு விருதுகளையும் பெற்ற இந்திய ஜனாதிபதி யார் ?

ஜாகிர் ஹுசைன் (பதவிக்காலம் 1967-1969)

English words & meanings

Firefly - a beetle which produces light. மின்மினி பூச்சி
2000 வகைகள் உள்ளன
லூசிஃபெரின் எனும் பொருள் தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்

Fern - an ornamental plant without seed. பன்னம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது
அழகு தாவரம்.
அதிக அளவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் .

ஆரோக்ய வாழ்வு

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும். இதில் உள்ள பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கிறது.

Some important  abbreviations for students

* IAAS - Indian Audit and Accounts Service

* ICAS - Indian Civil Accounts Service

நீதிக்கதை

"குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

திங்கள்

தமிழ் & பாடல்

தூய தமிழ் சொற்கள் கற்போம்

ஞாபகம்  -   நினைவு
இலட்சணம்  -  அழகு
ஆராதனை  -  வழிபாடு
உற்சவம்  -  விழா
காேத்திரம்  -  குடி

பாடல்
தமிழ் அமுது - வகுப்பு 3




இன்றைய செய்திகள்

22.07.2019


* மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 16 அடி உயர்ந்தது... ராமநதி அணை 10 அடி உயர்வு.

* இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

* தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

* ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி: 20 நாள்களுக்குள், 5 தங்கம் வென்று இந்தியாவின் ஹீமா தாஸ் அசத்தல்.

* இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதிப் போட்டியில் அகானே யமகுச்சிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பிவி சிந்து.

Today's Headlines

🌸 Heavy rainfall in the Western Ghats: Chervalaru Dam rises 16 feet in one day ... Ramanadhi Dam rises 10 feet.

 🌸Puducherry University has been ranked 11th among all Indian Universities

 🌸 Chandrayaan-2 spacecraft launched today which was postponed due to technical fault

 🌸Heema Das Asal of India won 5 gold medals within 20 days in the Olympic eligibility round

 🌸India's PV Sindhu won the silver medal after losing to Akane Yamaguchi in the final of Indonesian Open Badminton Series.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive