தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
மருத்துவ விடுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி லதா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் கூடுதலாக கவனித்து வந்தார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநராக இருந்த கிரண் குராலா, விழுப்புரத்தை தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக இயக்குநராக இருந்த குமரகுருபரன், சிப்காடு நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புயல் நிவாரண மறுவாழ்வு திட்ட இயக்குநராக இருந்த ஜெகநாதன், பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...