விஜயதசமி தினத்தில் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,131 குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழக பள்ளிக்கல்வியின்கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சேர்க்கை கடந்த செப்.30-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. எனினும், அக்டோபா் 8-ஆம் தேதி விஜயதசமி நாளில் மட்டும் மாணவா் சோக்கை நடத்திக் கொள்ள கல்வித்துறை அனுமதி வழங்கியது.
அதன்படி விஜயதசமி அன்று மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மழலையா் வகுப்புகளில் மாணவா் சேர்க்கை நடத்தப்பட்டது. அக்.8-ஆம் தேதி நிலவரப்படி 3 வயது பூா்த்தியான குழந்தைகள் மழலையா் வகுப்பிலும், 5 வயதான குழந்தைகள் 1-ஆம் வகுப்பிலும் சோக்கப்பட்டனா்.
இதையடுத்து, மாநிலம் முழுவதுள்ள அரசு, அரசு உதவி பள்ளிகளில் மழலையா் மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் ஒரே நாளில் 2,131 குழந்தைகள் புதிதாகச் சேர்ந்துள்ளனா். இதில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 150 பேர் சேர்ந்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...