Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..!' - இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை

ஆப்பிளின் iMessage சேவைக்குப் போட்டியாக ஆண்ட்ராய்டு தரப்பில் பல வருடங்களாகத் தயாராகி வந்த மெசேஜிங் முறை RCS. டெலிகாம் நிறுவனங்கள் ஒத்துழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து ஒருவழியாக இந்தச் சேவையை மக்கள் உபயோகத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது கூகுள் நிறுவனம். தற்போதைக்கு டெலிகாம் நிறுவனங்கள் உதவியில்லாமல் மாற்றுவழியில் இந்தச் சேவையை இந்தியாவில் செயல்படுத்தியிருக்கிறது கூகுள்.

அதென்ன RCS மெசேஜிங்?


வருகிறது RCS மெசேஜிங்
இப்போதைய SMS சேவைகள் பல வருடங்களுக்கு (1992) முன்பு அறிமுகப்படுத்தப்பட்டவை. தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்துவிட்டாலும் இது மட்டும் பெரிய அளவில் மாறவே இல்லை. அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான். அதே எழுத்து வடிவம்தான். போட்டோ, வீடியோ அனுப்பும் வண்ணம் வந்த MMS சேவையும் பெரியளவில் இன்று பயன்பாட்டில் இல்லை. இதற்குத்தான் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்கள் வந்துவிட்டனவே. சொல்லப்போனால் வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளுக்கு மட்டும்தான் இந்த SMS சேவைகள் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன. அதுவும் OTP-க்காகத்தான். இது SMS மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கே பெரிய அடி. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக முன்மொழியப்பட்ட சேவைதான் RCS எனப்படும் Rich Communication Service. இதில் SMS போல எழுத்துகள் மட்டும் இருக்காது. படங்கள், வீடியோக்கள் ஷேர் செய்யலாம்; க்ரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், QR கோடு என இன்னும் பல வசதிகள் இருக்கும். இவை அனைத்தும் உங்கள் மெசேஜ் ஆப்பிலேயே இருக்கும் இதற்கு டேட்டா சேவையைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

இது குறித்து இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்

ஏற்கெனவே Allo, Hangouts என்று மெசேஜிங் தொடர்பான சேவைகளை அறிமுகப்படுத்தி தோல்வியைக் கண்ட கூகுள் பல தடைகளைக் கடந்து இந்த RCS சேவை இறுதியாகக் கொடுக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதை enable செய்ய உங்கள் கூகுள் Messages ஆப்பின் Settings பகுதிக்குச் செல்லுங்கள் அதில் General பிரிவுக்குச் சென்று Chat Features சென்று Enable Chat Features என்ற ஆப்ஷனைத் தேர்வுசெய்யவும்.

தற்போது சில மொபைல்களில் மட்டும்தான் இதற்கான சப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இது அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive