PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி:தென்மாவட்டங்களில் மழை வாய்ப்பு

'வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டிருக்கும், 'கியார்' புயல், மஹாராஷ்டிராவுக்கு தென் மேற்கே, 880 கி.மீ., துாரத்தில் சுழல்கிறது. கணிப்புஇந்தப் புயல், மேற்கு திசையில் நகர்ந்து, நவ., 1ம் தேதி ஓமன் நாட்டில் கரையை கடக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரம், இந்திய பெருங்கடலில், இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, தமிழக கடலோர பகுதி வழியே, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு தென்மேற்கே மையம் கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, கன்னியாகுமரியை ஒட்டிய கடற்பகுதி வழியே, அரபிக்கடலை நோக்கி செல்ல உள்ளது. பின் படிப்படியாக நகர்ந்து, அரபிக்கடலின் வடமேற்கு பகுதி வழியே, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுக்கு நகரும் என, கணிக்கப்பட்டுள்ளது.இதனால், கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறைக் காற்று வீசும். இந்திய பெருங்கடலில், குமரிக்கடல் பகுதி, அதையொட்டிய வங்கக்கடல் பகுதி மற்றும் அரபிக்கடலின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அறிவுறுத்தல்
பாம்பன் துறைமுகத்தில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், சூறைக் காற்றுடன் கனமழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, இந்த மாவட்டங்களிலும் மீனவர்களும், பொதுமக்களும் முன் எச்சரிக்கையுடன் இருக்க, மாவட்ட நிர்வாகங்கள் வழியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என, எதிர்பார்க்கப் படுகிறது. சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மட்டும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group