NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு

பிளஸ் 2 வகுப்பில் அரசுப்பள்ளிக ளில்
முக்கிய பிரிவுகளுக்கு பாடப்புத்தகம் இன்னும் முழுமையாக கிடைக்க வில்லை. காலாண்டு முடிந்த பின்னரும் ஆசிரி யர் தட்டுப்பாடு நீடிப்ப தால் பெற்றோர், மாணவர் கவலையடைந்துள்ளனர். நடப்பு கல்வியாண் டில் 12, 10ம் வகுப்பு உள் ளிட்டசில வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற் றப்பட்டு புதிய பாடத் திட்ட புத்தகங்கள் அச்சடித்து வழங்கப்பட்டன.

12ம் வகுப்பிற்கு உரிய பல பாடப்பிரிவுகளின் புத்த கங்கள் பள்ளிகள் திறந்த பின்னரும் மாணவர் கள் கைகளில் கிடைக்க வில்லை . இதனால் ஆன் லைனில் டவுன்லோடு செய்து ஆசிரியர்கள் கற் றுக்கொடுத்து சமாளித்தனர். ஆயினும், புத்தகம் இல்லாத தால் மாண வர்களுக்கு பிராக்டிக்கல் ஒர்க் போன்ற பணிகளை கொடுப்பதில் ஆசிரியர்க ளுக்கு சிக்கல் உள்ளது. குறிப்பாக'உயிரி விலங் கியல்' என்ற பாடப்புத்த கம் ஆங்கில வழி பயிலும் மாணவர்கள் பலருக்குஇன்னும் வழங்கப்படவில்லை.காலாண்டு முடிந்த பின்னரும் இந்த பாடப்புத்தகம் கிடைக்காததால் இதனை நடத் தும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.
இது போல் காலாண்டுக்கு பின்னர் இயற்பியல், வேதி யியல் 2ம் தொகுதி பாடப் புத்தகம் கடந்த3ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதும் வழங்கப்படும் என எதிர்பார்த்து மாணவர்கள் வந்திருந்தனர். ஆனால் இந்த பாடப்புத்தகமும் கிடைக்காத பள்ளிகளில் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் சில பள் ளிகளில் பிளஸ் 2 வகுப் பில் கணிதம், அறிவியல் போன்ற பல முக்கியப் பாடங்களுக்கு பாடம் நடத்த நிரந்த ஆசிரியர் இல்லை .
சில பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் ₹10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து சமாளிக்கின்றனர். சில பள்ளிகளுக்கு இந்த நிதியை விடுவிப்பதில் தாமதம் மற்றும் குறைந்த சம்பளத்தில் பாடம் நடத்த தகுதியான தற்காலிக ஆசிரியர்கள் கிடைக் காமல் இருப்பது போன்ற காரணங்களாலும் தடுமாற்றம் நீடிக்கிறது. இது குறித்து பிளஸ் 2 பாடம் நடத்தும் ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர் கூறுகையில், 'பாடப் புத்தகங்களை உரிய நேரத்தில் தருவதில்லை .
இது போன்ற காரணங்க ளால் பிளஸ் 2 கல்வித்தரம் குறைந்து வருகிறது. எனவே, பிளஸ்2 மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்களை தாமதமின்றி வழங்குவதுடன் ஆசிரியர் காலிப் பணியிடங்களை இனியும் தாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும்” என்றனர்.




1 Comments:

  1. Ella vagapukalukkum vanthilanthu vanthu class edupakanga...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive