ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்வது குறித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக வரவேற்பு பெற்றிருப்பது வியப்பல்ல.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது?
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது; தனியார் பள்ளிகள் போல யாருக்கும் இடமளிக்க மறுக்க முடியாது. அனைவரும் கற்கத் தகுந்தவர் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.
மாணவர் ஏற்புத் தன்மையைக் கருதாது கடந்த 70 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி பாடத்திட்டங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் கிடையாது.
பல்வகுப்பு கற்பித்தலுக்கு இணங்கப் பாடத்திட்டங்கள் இல்லை. ஒவ்வொரு வகுப்புக்கு ஆசிரியர் இருந்தும் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தனிப் படிப்புக்குச் செல்வது பள்ளி நேரத்தில் கற்க இயலாமையைச் சுட்டுகிறது.
இவற்றைக் கணக்கிடாது ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரம் உயரும் என்பது அடிப்படைகளை புரிந்துகொள்ளாததால் சொல்லப்படுவது,
ஆசிரியர்களும் அரசு அலுவலர்கள் அவர்கள் ஆற்றுகிற பணிக்கு ஊதியம் பெறுகின்றனர்; தம் உரிமைகளை அரசுக்கு அடகுவைக்கவில்லை. ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கு உண்டு.
கற்பித்தல், கற்றல் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உதவிக் கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை ஒரு பெரும் பட்டாளம் கல்வித் துறையில் இருக்கிறது.
அதன் செயலின்மையே அரசுப் பள்ளிகளின் நிலைக்குக் காரணம் என்று அறிதல் வேண்டும்.
欄தோழமையுடன்;
ச.சீ.இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர்,
சென்னை
மூத்த கல்வியாளர்,
சென்னை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...