மதுரை, தமிழகத்தில் பணி நிரவலில் மாற்றம் செய்யப்பட்ட தென்மாவட்ட ஆசிரியர்
பயிற்றுனர் 500 பேருக்கு ஆறு ஆண்டுகளாக மாறுதல் கலந்தாய்வு
நடத்தப்படவில்லை.அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (தற்போது ஒருங்கிணைந்த
கல்வி) பட்டதாரி ஆசிரியர் அந்தஸ்தில் 3800க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்
பயிற்றுனராக உள்ளனர். இவர்களில் 2010ம் ஆண்டில் 1100 பேர்
நியமிக்கப்பட்டனர்.ஒவ்வொரு ஆண்டும் சீனியாரிட்டி அடிப்படையில் 400 பேர் வரை
ஆசிரியர் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு, காலியாகும் இடங்களில் புதிய
பயிற்றுனர் நியமிக்கப்படுவர். 2010க்கு பின் புதிய பயிற்றுனர் நியமனம்
இல்லை.இதற்கிடையே 2010- 2012 வரை 1500க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் பணிக்கு
மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2014ல் பணி நிரவல் என கூறி மதுரையில் 64 உட்பட
தென் மாவட்டங்களில் 492 பயிற்றுனர்கள் திருவாரூர், வேலுார், நீலகிரி என
மாவட்டங்களில் நிரவல் செய்யப்பட்டனர். ஆனால் ஆறு ஆண்டுகளாக கலந்தாய்வு
நடத்தப்படவில்லை.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:இதில் 80
சதவீதம் பெண் பயிற்றுனர்கள். கணவர், குடும்பத்தை விட்டு வடமாவட்டங்களில்
தனித்து வாழ்கின்றனர். மாறுதல் கலந்தாய்வு என்பது ஆசிரியர்
பயிற்றுனர்களுக்கும் பொருந்தும் என்றாலும் ஒவ்வொரு ஆண்டு விதிமுறையிலும்,
'ஆசிரியர் பயிற்றுனருக்கு பின்னர் அறிவிக்கப்படும்' என கல்வித்துறை
தெரிவித்து ஓரவஞ்சனை செய்கிறது.இதுதொடர்பான வழக்கில் நீதிமன்றமும் எங்கள்
கோரிக்கையை ஏற்று நல்ல உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே பாடவாரியாக
சீனியாரிட்டி அடிப்படையில் மாநில கலந்தாய்வு நடத்த வேண்டும், என்றனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» கானலாகும் மாறுதல் கலந்தாய்வு அவதியில் ஆசிரியர் பயிற்றுனர்கள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...