++ வனக்காவலர் பணிக்கான 'ஆன்லைன்' தேர்வு துவக்கம் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
வனத்துறையில் காலியாக உள்ள, 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, நேற்று துவங்கியது.

தமிழக வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும், 564 வனக் காவலர் பணியிடங்களுக்கான, ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, 1.67 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

தமிழகம் முழுவதும், நேற்று, 100க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு துவங்கியது. இன்றும், நாளையும் இத்தேர்வு நடக்கும். சென்னையில், நந்தனம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட மையங்களில் தேர்வு துவங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட வன அலுவலர்கள், வன சரகர்கள், தேர்வு நடைமுறைகளை மேற்பார்வையிட்டனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...