Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Telegram குழுவில் பெற Click Here & Join Now! - https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA

பருவமழை முடிவுக்கு பின்னர் சூரியனின் வெப்பக் கீற்று, பெய்த மழையை மறக்கச் செய்யும்படி சுளீரென கடமையாற்றுவது இயற்கையின் வழக்கம். அப்படியான தருணங்களில் உஷ்ணம் தொடர்பான நோய்களான அம்மை, அக்கி போடுதல் போன்றவைகளோடு 'மெட்ராஸ் ஐ' என்கிற கண் நோயும் வந்து விடுகிறது.
மெட்ராஸ் ஐ நோய் தாக்கியவர்கள்,  கண்ணின் உட்புறத்தில் எரிச்சலை அதிகமாக உணர்வார்கள். அதனால் அவர்கள் அடிக்கடி கண்களை நீர்விட்டு கழுவும் பொருட்டு ஒரு பாட்டில் நிறைய தண்ணீரை கையில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் மெல்லிதான கைக்குட்டை அல்லது டவல் கையில் வைத்திருப்பதும் நல்லது.
இது எளிதில் அனைவருக்கும் பரவிடக் கூடிய தொற்றுநோய் என்றாலும், அதிகபட்சமாக ஐந்து நாட்களுக்கு மேல் தங்குவதில்லை. அந்த வகையில் மெட்ராஸ் ஐ ஒரு கவுரவமான விருந்தாளி எனலாம். ஏ.சி. நிறைவாய் இருக்கிற இடங்களில் பணியாற்றும் ஒருவருக்கு மெட்ராஸ் ஐ வந்து விட்டாலே போதுமானது. நொடிகளில் உடன் பணியாற்றும் அனைவருக்கும் தொற்றிக் கொள்ளும். நம்முடைய விரோதி, நண்பர், பெரியவர், குழந்தை என்று சமரசமே இல்லாமல் சமத்துவத்தை நொடிகளில் பரவச்செய்யும்ம் இந்த மெட்ராஸ் ஐ.
எல்லோரும் நேற்றுவரை மழையிலிருந்து காத்துக் கொள்ள குடை தேடி ஓடினர். இப்போது கூலிங்கிளாஸை தேடி ஓடத் தொடங்கி விட்டனர். கிராமங்களில் இன்னும் 'மெட்ராஸ் ஐ' வந்துட்டுப் போனா கண்ணுக்கு ரொம்ப நல்லது, கண்ணு முச்சூடும் சுத்தமாயிடும்' என்ற நம்பிக்கை சொல்லாடல் வழக்கத்தில் இருக்கிறது.
 ‘மெட்ராஸ் ஐ’ - யை விரட்டும் வழிகள்!
 இந்த நோய்க்கான சிகிச்சை மற்றும் தற்காப்பு குறித்து பேசுகிறார், வேலூரைச் சேர்ந்த சித்த வைத்தியர்
பரவுகிறது ' மெட்ராஸ் ஐ...' -  விரட்டும் வழிகள்!
அர்ஜுனன். இவர், தமிழ்நாடு பாரம்பர்ய சித்தவைத்திய மகாசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.
''இது, பருவநிலை மாறுபாடு காரணமாக வரும் ஒரு தொற்றுநோய். கண் அரிப்பு, கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிவது போன்றவை இந்தக் கண் நோய்க்கான அறிகுறிகள். பொதுவாக, இந்தக் கண் நோய் 7 நாட்கள் வரை இருக்கும். கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் 15 நாட்கள் வரை இதன் வீரியம் இருக்கும்.
காற்று, கைகுலுக்குதல் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை (கர்ச்சீஃப், துண்டு, பேனா, அழிப்பான், பேப்பர்) பயன்படுத்துவது மூலம் இது பரவும். ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியையும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.
பாதிக்கப்பட்டவர்கள், ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு கண்களை திறந்து மூட வேண்டும். காலை, மாலை என இரண்டு, மூன்று நாட்களுக்கு இப்படி செய்துவர, குணம் கிடைக்கும். சுத்தமான பஞ்சில் பன்னீரை விட்டு, மூடிய கண்கள் மீது வைக்கலாம். இது கண்களில் இருக்கும் உஷ்ணத்தைக் குறைக்கும். இதை மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
காலை, மாலை சிறிது நேரம் நந்தியாவட்டை மலரை எடுத்து கண் இமை மீது ஒற்றி எடுக்கலாம். இ்தையும் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்துவர, 'மெட்ராஸ் ஐ’ காணாமல் போய்விடும். குழந்தைகளுக்கு மிக எளிதில் பரவும் இந்நோய்க்கு, பன்னீர் மிகச்சிறந்த நிவாரணி.
தாங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் பன்னீர் ஆகியவை தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்'' என்று சொன்ன அர்ஜுனன், ''சித்த வைத்தியமாக இருந்தாலும், வேறு மருத்துவ முறைகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுயமாக சிகிச்சை செய்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்'' எச்சரித்து முடித்தார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments