அறுசுவைகளில் ஒரு சுவை கசப்பு. அந்த கசப்பை தவிர்க்கவே நினைப்போம். ஆனால்
கசப்பு நிறைந்த வேப்பிலைகளில் மருத்துவகுணங்கள் அதிகம் உள்ளது. பாட்டி
வைத்தியத்தில் நோய் தீர்ப்பதில் முதன்மையான இடத்தில் வேப்பிலை உள்ளது.
வேம்பிள் இலை, காய், கனி அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது..
வேப்பம் இலை சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளை கரைத்தல், வாதம்,
மஞ்சள் காமாலை, நீரிழிவு தோல் வியாதிகள், பூச்சிக்கொல்லியாகவும்
பயன்படுகிறது.
வேப்பங்கொழுந்து அதிமதுரப்பொடியும் சம சேர்த்து நீர்விட்டு அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை போல கொடுத்து வர அம்மை நோய் தணியும். வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் தூள், சேர்த்து தடவி வந்தால் பித்த வெடிப்பு கட்டி பரு அம்மைக்கொப்புளம் ஆகியவை குணமாகும். உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஓத்தடம் கொடுக்க நரம்பு இசிவு கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு கண்ட மாலை கீழ் வாதம் குணமாகும்.
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும். வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு ஒரு வருடம் கழித்து இந்த பூவைக்கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். வேப்பிலை கசாயம் கிருமிகளைக் கொன்ஞு காய்ச்சலைக் கட்டுபடுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும் காலை வேளையில் பத்து வேப்பிலை கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாக வாய்ப்புள்ளது.
இது குறித்து சித்தா மருத்துவர்கள் சுறுகையில் நம் ஒவ்வொருவர் வயிற்றிலும் எப்போதும் வயிறு தொடர்பான தொற்றுநோய் இருந்துகொண்டே இருக்கும். இது நோயாக வெளிப்படாவிட்டாலும் உடலில் சக்தியை தொம்பை குறைத்துக்கொண்டே வரும். தொற்றுநோய் வயிற்றில் இருக்கிறதென்றால் அதற்கு காரணமான பாக்டீரியா கிருமிகளும் வயிற்றில் இருக்கும். இந்த கிருமிகளே உடலில் உள்ள சக்தியை இழுத்துக் கொண்டு விடுகின்றன.
விடியற்காலையில் வேப்பங்கொழுந்து உருண்டையும், மஞ்சள் உருண்டையும் சாப்பிட்டால் இரத்த கிருமிகள் அழிந்துவிடும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர் பட்டை, வேர், காய், உலர்த்திய சூரணத்தை 6 மாதம் சாப்பிட்டு வந்தால் தோல் நோய் அனைத்தும் குணமாகும். இதற்கு புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும். வேப்பிலை எலுமிச்சம் பழசாற்றில் அரைத்துத் தலைக்கு தேய்க்க பித்த மயக்கம் குணமாகும். வேப்பிலை மஞ்சள் சேர்த்து அரைத்து பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும்.
நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும். வேப்பிலையை பச்சையாகவும், வேகவைத்தும் அல்லது கசாயம் செய்தும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய் அனைத்தும் தீர்ந்துவிடும். வேப்பிலையில் நார்சத்து, மாவுசத்து, மற்றும் புரதசத்து 10விதமான அமினோ அமிலங்கள் உள்ளன. வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருத்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர்.
நன்றி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...