Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

எழுந்து வா நம்மில் பலர் காரணம் கூறி தோல்விகளை தணிந்துக் கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்திடவும் தயங்கும் நாமே அதிர்ஷ்டம், நேரம், போட்டி இன்மை என பிறர் வெற்றியை சீரணிக்க காரணம் தேடுகின்றோம். இங்கே ஓர் அழகான தரமான தன்னம்பிக்கை     உண்மையை உங்களிடம் கூற விழைகிறேன்.
பார்வைக்கும் கனவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை நிருபித்து மாவட்ட ஆட்சியர் பதவியில் பொறுப்பேற்ற முதல் பார்வையற்ற பெண் என்ற பெருமையை பெற்றவரை பற்றித்தான் பார்க்கப் போகிறோம். இந்தியாவிலேயே முதன்முறையாக நேரடி கலெக்டர் தேர்வு மூலம் கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நமக்கு அருகில் உள்ள அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். தனது இரண்டாவது வயதில் கண் பார்வையை இழந்தபோதும், தனது விடாமுயற்சியாலும், தொடர் பயிற்சியாலும் , மன உறுதியாலும், கடின உழைப்பாளும் , போராடி படித்து, இந்தியாவிலேயே முதல் பார்வையற்ற பெண் மாவட்ட ஆட்சியர் (IAS கலெக்டர்) என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கர்நாடகா மாநிலத்தைச்  சேர்ந்த செல்வி. பிரஞ்ஜாலின். மகாராட்டிர மாநிலம் உல்லாஷ் நகரைச் சேர்ந்தவர் பிரஞ்ஜாலின் பாட்டில். இவரது தந்தை என்.பி.பாட்டில்  பொறியாளர் ஆவார். இவரது மகளாக ஆரோக்கியமாகப் பிறந்த பிரஞ்ஜாலினுக்கு இரண்டு வயது ஆனபோது திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் அவரது பார்வை பறி போனது.  அவரது பெற்றோர்களுக்கு மிகுந்த வேதனையை அளித்தது .புறக்கண் இல்லாவிட்டாலும், அகக்கண் மூலம் உலகைப் பார்க்கும் தைரியத்தை பாட்டில் குடும்பத்தினர் தமது மகளுக்கு கொடுத்தனர். பாட்டிலும், அவரது மனைவி ஜோதியும். தொடுதிரை உதவியுடன் தம் மகளுக்கு  படிப்பைத் தொடர்ந்தனர். 


பிரஞ்ஜாலினுக்கு சிறு வயது முதலே சமூக சேவை செய்ய வேண்டும் இந்த மனுட சமுகத்திற்கு உதவ வேண்டும் என்ற உயரிய  எண்ணமும்  வளர்ந்தது.  “நம் உடல் குறைகளைப் பற்றி நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கையில் எதையுமே சாதிக்க இயலாது என்றுணர்ந்து . தமக்கு கண் பார்வை இல்லாவிட்டாலும், அதைக் குறித்து நான் என்றுமே கவலைப்பட்டதே இல்லை என்று கூறி  வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தேவையானவை பற்றி சிந்தித்தார். நமக்கு என்ன தேவையோ அதற்காக மட்டுமே அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறி அவ்வாறே உலகம் வியக்கும் இமாலய வெற்றியை தனதாக்கியுள்ளார்.  தன்னைப் போன்ற மாற்றுதிறனாளிகளுக்கு பிரஞ்ஜாலின் சொல்லும் அறிவுரை என்னவெனில் நம்மால் முடியும் என நம்புவோம் என்பதே .பிரஞ்ஜாலின் பள்ளிக் கல்வியை முடித்து, மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.பிறகு டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. பயின்று டாக்டர் பட்டம் பெற்றார். சமூக சேவை செய்ய வேண்டும் என்ற தீராத தேடல் செல்வி.பிரஞ்ஜாலினை IAS தேர்வு எழுதத் தூண்டியது என்பதை நம்மால் உணர முடிகிறது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் 773 இடம் பிடித்ததால், அவரால் கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு கைகூடவில்லை. இருப்பினும் இதற்கிடையே ரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது.  அப்பணியில் சேரலாம் என  இருந்தவருக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. கண்பார்வையற்ற ஒருவருக்கு அப்பணியை ஒதுக்க இயலாது என ரயில்வே கைவிரித்தது. முயற்சியை  மீண்டும் தொடர்ந்து  ஐஏஎஸ் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினார் பிரஞ்ஜாலின். தீவிர முயற்சியின் பலனாக 2017ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் 124 வது  இடத்தைப் பிடித்தார். அதன்  தொடர்ச்சியாக இப்போது கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் செல்வி. பிரஞ்ஜாலின். தனக்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி ஆட்சியர்  இருக்கையில் தான் அமர்வதற்கு முன்பாக, ‘தனக்கு ஊக்கமும், தைரியமும் அளித்து, தன்னை இந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்த்திய தம் தாயை கௌரவப் படுத்த நினைத்தார் பிரஞ்சாலின். அதன்படி, தனது பயிற்சி கலெக்டர் இருக்கையில் தமது உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் தனது அம்மாவை அமர வைத்து, அதனை தனது அகக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.  


“சிறுவயது முதலே எனது கனவு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது தான். பார்வை இல்லாத காரணத்திற்காக என் கனவை விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை. என் கனவுக்காக நான் கடுமையாக உழைத்தேன். இதோ, இப்போது என் கனவு நனவாகி விட்டது,” என பெருமையுடன் கூறுகிறார் செல்வி. பிரஞ்ஜாலின். தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியும் இருந்தால், உடல் குறைபாடுகள் ஒன்றும் தடையாக இருக்காது என்பதை தனது வெற்றியின் மூலம் உலகிற்கு நிரூபித்துக்காட்டிய பிரஞ்ஜாலினுக்கு வாழ்த்துகள் கூறுவோம். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதும் .சிறப்பிடம் பெறுவதும் ஆகும் *இத்தகைய சிறப்பு மிகு தன்னம்பிக்கையாளர்கள் உள்ள வரை உலகம் சோர்ந்து விடாது* சாதிக்க உடல், மன குறைகள் காரணமல்ல என நிருபித்து சாதித்த சகோதரி அவர்களை வாழ்த்துவோம் , போற்றுவோம். 
*முனைவர்
*கவிஞர் ராஜா ஆ
*பண்ணுருட்டி

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments