உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. தமிழகத்தில் இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு அதன்படி ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டது. ஒருசில வாரங்கள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட இந்த உத்தரவு நாட்கள் செல்ல செல்ல மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கிவிட்டது.
இந்நிலையில் பிளாஸ்டிக் கப்பிற்கு பதிலாக இந்த கப்பை பயன்படுத்திவிட்டு அதை அதை தின்னும் வகையில் ஈட்டபிள் கப்புகளை தயாரிக்க உள்ளது நிறுவனம் ஓன்று. எந்த ஒரு ரசாயனமும் இதில் இல்லாமல் முழுக்க முழுக்க தானியங்களால் தயாரிக்கப்பட்ட இருக்கும் இந்த கப்புகளில் சூடான ஆழத்து குளிரான பணத்தை 45 நிமிடங்கள் வரை நமத்துப்போகாமல் வைத்திருக்கமுடியும்.
கப்பில் இருக்கும் பாணத்தை அருந்திவிட்டு அந்த கப்பை தின்றுவிடலாம். வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த கப் விரைவில் இந்தியாவிலும் தயாரிக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...