இன்று சென்னை பல்கலை, ''செமஸ்டர்''

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், செமஸ்டர் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. மாணவர்கள் காப்பி அடிப்பது போன்ற முறைகேடுகள், தில்லுமுல்லுகள் இல்லாமல் தடுக்கப்படுமா என, மாணவர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.சான்றிதழ் படிப்புகள்சென்னை பல்கலை நடத்தும் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் மற்றும் மே, ஜூன் மாதங்களில், செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு, சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில், தனியார் கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. அவற்றில், தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். தேர்வு மையம் அமைக்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு, சென்னை பல்கலை சார்பில் கட்டணமும் செலுத்தப்படுகிறது. ஆனால், பல தேர்வு மையங்களில், மின் விசிறி, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படுவதில்லை. தொலைநிலை கல்வியில் படிப்பவர்கள் என்பதால், எப்படியாவது தேர்வை எழுதிவிட்டு, பட்டம் வாங்கினால் போதும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். புகார்எனவே, அடிப்படை வசதி குறித்து மாணவர்கள் கேள்வி கேட்டால், அதை சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளர்கள் கண்டு கொள்வதில்லை. பல தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்கள் சரியாக கண்காணிப்பு பணியை மேற்கொள்வதில்லை என்ற புகார், நீண்ட காலமாக உள்ளது. பெயரளவுக்கு தேர்வு அறைக்கு வந்து, வினாத்தாள் வழங்கி, வருகை பதிவு மேற்கொள்வது, பின், விடைத்தாளை சேகரித்து கட்டு கட்டி அனுப்பி விட்டு, அந்த பணிக்கான சம்பளம் பெறுவது என்ற நிலையே பல ஆண்டுகளாக தொடர்கிறது. கல்லுாரி மாணவர்கள் மற்றும் ரெகுலர் படிப்புகளில் உள்ள மாணவர்களை போன்று, தொலைநிலை கல்வி கற்கும் மாணவர்களுக்கு, கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடத்தப்படுவதில்லை. பல மையங்களில், புத்தகத்தை தேர்வறைக்கு கொண்டு வந்து, பார்த்து எழுதும் சம்பவங்களும் நடக்கின்றன. முறைகேடுஅதேபோல், பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, மற்றவர்களின் விடைத்தாளை வாங்கி எழுதி விட்டு கொடுப்பது, பிட் எடுத்து வந்து தேர்வு எழுதுவது போன்ற சம்பவங்கள், ஓபன் சீக்ரெட் என்று சொல்லும் வகையில் நடக்கின்றன. இவற்றை, பறக்கும் படையினரும் கண்டு கொள்வதில்லை. பல தேர்வு அறைகளில், கண்காணிப்பாளராக வருபவர்கள், மாணவர்கள் காப்பி அடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க, தனியாக, கவனிப்பு பெறும் மோசமான நிலையும் உள்ளது.

இதன் உச்சகட்டமாகத்தான், சென்னை பல்கலை தேர்வுகளில், பல விடைத்தாள்களில், ஒரே விதமான கையெழுத்தும், ஒரு விடைத்தாளில், பல விதமான கையெழுத்துகள் இருந்து, அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்ட முறைகேடும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து, போலீசில் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு, இன்று துவங்கும் நிலையில், இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல், தொலைநிலை கல்வியில் படிப்பவர்களும், தரமான முறையில் படித்து, முறையாக பட்டம் பெறுகின்றனர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Source: Dinamalar
1 Comments:

  1. நான் தற்போது இப்பல்கலைக்கழகத்தில் தான் தொலைநிலைக்கல்வி படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நான் எழுதும் தேர்வில் காப்பி அடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive