Total Pageviews

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் வைக்க குறிப்புகள்....!!


உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது.யோகாசனம் யோகா போஸ் எடை இழப்புக்கு உதவும். இந்த யோகா போஸ் செரிமான செயலை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் நல்ல செரிமானம் சரியான எடை மேலாண்மை வழிவகுக்கிறது. நீங்கள் ஓய்வு நேரங்களில் கூட போஸ் முயற்சி செய்யலாம். இதனால்  உங்கள் வயிறை சுற்றி உள்ள கூடுதல் கொழுப்பு எரிகிறது.
1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.
தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடித்து வரவும்.
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை கண்டிப்பாக குறையும்.
தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
உடல் எடையை குறைக்க சிறந்த பானங்களில் நெல்லிச்சாறு சிறந்த ஒன்றாகும். பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து  அருந்த, உடல் எடை குறையும்.
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில்  கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை தூண்டுவதுடன், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்க  உதவுகிறது.


உடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது கட்டாயம். இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும். இன்று கிடைத்துள்ள பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது இதுதான். அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும் என்பதுவே அது. சர்க்கரை வியாதி, ரத்தக் கொழுப்பு ரத்த அழுத்தம், குழந்தையின்மை என்று உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
கீழே உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமாக என்னென்ன காரணங்கள் உள்ளன? என்று பார்க்கலாம்.

தவறான உணவு பழக்கங்கள்.
பரம்பரை காரணம்.
ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சனை.
உடல் உழைப்பு இல்லாமை.
பிரசவத்திற்கு பின்பு இயல்பாகவே அதிகரிக்கும் எடை.
வேறு சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள்.
என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை பார்க்கலாம்?
பெர்ரி பழங்கள்

பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன. ஆக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிட உகந்தது. படிக்க: உடல் எடையை குறைக்கும் பானங்கள்!

எலுமிச்சை
உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் சற்று மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர உடலில் சேர்ந்து கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கழிவுகள் நீங்கிவிடும். இது ஒரு எளிமையான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய வழியாகும்.

பசலைக் கீரை
பொதுவாக உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா கீரைகளும் சாப்பிட உகந்தது தான். இருப்பினும் பசலைக்கீரையை குறிப்பிட்டு கூறலாம். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது. பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை தருகிறது. கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும். கூடுதலாக இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பசலைக்கீரையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை
உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை அற்புதமான வகையில் உதவுகின்றது. இந்த கருவேப்பிலையின் அருமை தெரியாமல் பலரும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால் இந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஆக இதை பொடியாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம். அல்லது இலைகளை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது உகந்தது. இது தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே பலனை பார்க்கலாம்.

தண்ணீர்
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வரிகள் துணைபுரியும். சாதாரண தண்ணீர் தானே என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

கிரீன் டீ
தினமும் கிரீன் டீ தயாரித்து பருகலாம். இந்த கிரீன் டீ அதிக அளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ அருந்துவதால் பல்வேறு கூடுதலாக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

சூப்
காய்கறி மற்றும் கீரை சூப்-களை சமைத்து சாப்பிடுவது உகந்தது. இந்த சூப் வகைகளில் தேவையான அளவு மிளகு சேர்க்க வேண்டும். கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிளகில் அதிக அளவு உள்ளது.

உடல் எடை குறைய டிப்ஸ்…
உடல் எடை குறைய வாழ்வியல் முறையில் என்னென்ன மாற்றங்களை கடைபிடிக்கலாம்? என்று பார்க்கலாம்.

உடற்பயிற்சி
உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.

சாப்பிடும் முறை
சாப்பிடும்பொழுது டிவி மொபைல் போன் போன்ற வற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.

தூக்கம் தேவை
சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது.

எண்ணெய் பண்டங்கள் கூடாது
எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

இனிப்பு வேண்டாம்
இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நடந்தே செல்லுங்கள்
பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தலங்களுக்கு செல்லும் விழுது லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.


மன அழுத்தம் வேண்டாம்
வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்களை உடல் எடையை சாத்தியப்படுத்தி விடுகின்றன. மனவளக் கொள்வதும் ஒரு சிறந்த கலை தான். அதை இயன்றவரை கடைப்பிடிக்க பாருங்கள்.

யோகாசனம்
உடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் வியத்தகு பலனை அடைய முடியும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்யக் கூடாதது என்ன?
எதிர்மறை எண்ணம் வேண்டாம்
நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இதற்காக நீங்கள்

தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒரு தவறு செய்கின்றனர். இதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் ஒன்று இரண்டு நாட்களிலேயே பலன் தெரிய வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர் இதற்கான சாத்தியம் குறைவு. இப்படி நடக்கும் பொழுது அவர்கள் மன வளர்ச்சி அடைகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியை பாதியிலேயே கைவிடுகின்றனர். இது மிக மிக தவறான நடவடிக்கையாகும்.

நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் பலனளிக்கும் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ஆனால் எல்லாமே அந்த கணத்தில் நிகழ்ந்து விடாது. படிப்படியாக உடல் எடையைத் குறையத் தொடங்கும். அதுவரையும் நம் முன் வைத்த காலை எந்த சூழலிலும் பெண் வைக்கக் கூடாது.தொடர் முயற்சி பலனை அளிக்கும் என்பார்கள். அது உடல் எடையை முயற்சிக்கும் 100% உண்மையானது. இந்த எண்ணத்தை ஆழமாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே உங்கள் எடை குறைந்து நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள் என்பது உறுதி.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive