Hi Whatsapp Admins!

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now! - https://m.helo-app.com/al/URyRSdZpF


கொரோனா என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் தீவிரமாக பரவிவரும் இந்த தொற்றை எதிர்கொள்ள மக்கள் அச்சத்துடன் தயாராகிவருகிறார்கள்.மருத்துவர்களும், அரசும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மற்றொரு புறம் கொரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனமும், மருத்துவர்களும் அவ்வபோது கொரோனா குறித்த செய்திகளையும் வெளியிட்டுவருகிறார்கள். இதில் வயதானவர்களை தவிர உடலில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் குறைபாடு, சுவாசக்கோளாறு பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த தொற்று பரவினால் அவர்களை காப்பாற்றுவது சவாலாக இருப்பதாகவும் உயிரிழப்பில் இந்த பாதிப்புக்குரியவர்களே அதிகம் என்பதும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து அச்சப்படவேண்டியதில்லை. கூடுதல் கவனத்தோடு நோயை கட்டுக்குள் வைத்துகொண்டால் அச்சம் இல்லை என்று ஆறுதல் தருகிறார்கள் மருத்துவர்கள்..​கொரோனாவும் நீரிழிவும்

குணப்படுத்த முடியாத நோய்களில் இதுவும் ஒன்று. உலகில் அதிக அளவு மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட் டிருக்கிறார்கள். தற்போது கொரோனா தாக்குதலால் நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்கள் பாதிக்கப்படலாம் என்ற தகவலும் பரவிவருகிறது. இது உண்மையானது அல்ல. அதே நேரம் இதை அலட்சியப்படுத்தவும் கூடாது.
நீரிழிவு பாதிப்பு இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் தான் இவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்கிறார்கள். கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு பிரச்சனை இருந்தால் ஒருவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளானால் வேகமாக படர்ந்து தீவிரமான பாதிப்பை உண்டாக்கிவிடும்.கொரோனாவை எதிர்க்கும் 10 விதமான ஊட்டச்சத்து பானங்கள் தவிர்க்காமல் குடியுங்கள்!சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும் வரை இவர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் உண்டாகாது. கொரோனா தொற்றுக்கு உள்ளானாலும் கூட சாதாரண மனிதர்களுக்கு உண்டாகும் பாதிப்பு தான் இவர்களுக்கும் உண்டாகும். அதனால் இப்போதைக்கு கொரோனாவை கண்டு பயப்படாமல் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதுதான் நல்லது.

​உயர் இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் இரண்டு வகையில் உண்டு. உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம் என்று இருவகைப்படும். இரண்டு வித குறைபாடும் கட்டுப்படாமல் இருந்தால் அவை ஆபத்தை உண்டாக்குபவையே.இதை அலட்சியப்படுத்தும் போது இதயத்தின் செயலிழப்பு வரை கொண்டு சென்று உயிரை பறிக்ககூடியதே.
ரத்த அழுத்தம் பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் உடல் உறுப்புகள் சேதாரமாக தொடங்கும். இந்த நிலையில் தொற்று பரவும் போது சிகிச்சை அளிப்பது மேலும் சிரமத்தை உண்டாக்கிவிடும்.உணவு, வாழ்க்கை முறையில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.ஆஸ்துமா

நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் குழந்தைகள் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனைக்கு உள்ளாவார்கள். தொடர்ந்து சளி பிடிக்கும் போது கிருமிகள் நுரையீரலில் உள்ள கிருமிகளை தாக்குகிறது. இதனால் மூச்சுக்குழாயில் சுவாசம் செல்வது தடைபடும் வகையில் அதன் உட்சுவர் பாதிப்புக்குள்ளாகிறது. வீக்கமும் உண்டாகிறது. இதனால் மூச்சுகுழாய் சுருங்கி விரியும் தன்மை குறைந்து மூச்சுவிடுவதில் சிக்கலை உண்டாக்குகிறது.
pneumonia: நிமோனியா காய்ச்சல் அலட்சியப்படுத்தகூடாது ஏனெனில்...
உடலிலிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு நச்சு காற்று வெளியேறுவதிலும், ஆக்சிஜன் உள்செல்வதும் குறைகிறது. இந்த தடங்கலை மீறி சுவாசிக்கும் போது தான் வீசிங் பிரச்சனையை சந்திக்கிறார்கள்.கொரோனா தொற்று பாதிப்பை உண்டாக்குவது சுவாசப்பிரச்சனையை தான் என்பதால் இந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம்.​நுரையீரலில் நீர் கோர்வை

நுரையீரலில் உண்டாகும் நீர் தொற்று தான் நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. மூச்சு சீராக வைத்திருக்கும் பணி நுரையீரலுக்கானது. நுரையீரலில் கிருமித்தொற்று வரும் போது நிமோனியா என்னும் காய்ச்சல் வருகிறது. சுவாசிக்கும்போது கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உள்நுழைந்து சுவாசக்குழாய் வழியாக நுரையீரலை அடைகின்றன. அங்கேயே தங்கி அவ்வபோது பாதிப்பை உண்டாக்கவும் செய்கின்றன.
குழந்தைகளும் பெரியவர்களும் தான் இந்தபாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆக்சிஜனை உள்ளிழுத்து இரத்தத்தில் கலக்க உதவும் நுரையீரலின் பணி தடைபடும் போது மூச்சுத்திணறல் பிரச்சனைக்கு உள்ளாகும் இவர்களை தொற்றுக்கள் எளிதாக தாக்க வாய்ப்புண்டு. ஒருவேளை இவர்கள் இந்த தொற்றுக்கு உள்ளானால் சிகிச்சை செய்வதுமிகசவாலானதாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில் நுரையீரலை பலப்படுத்தும் உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.​மருந்துகளை தவிர்க்க வேண்டாம்

மேற்கண்ட இந்த பிரச்சனை இருப்பவர்கள் இதை அதிகரிக்கும் விதமான உணவுகளை எடுத்துகொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த நோய்களுக்காக மருந்து மாத்திரைகளை எடுத்துவருபவர்கள் நேரம் தவறாமல் எடுத்துகொள்வதையும் மறக்க கூடாது. நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள் இன்சுலின் ஊசி போடுவதாக இருந்தாலும் சரியான நேரத்தில் போட்டுகொள்வது நல்லது. இயன்றால் உங்கள் கடந்த 3 மாதங்களில் உங்களில் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்து வைத்துகொள்வது நல்லது.
Corona Covid 19: கொரோனா தொற்று பரவாமல் என்ன செய்யலாம்? என்ன செய்யகூடாது? தயவு செய்து கடைபிடியுங்கள்.மாத்திரைகளின் வீரியம் குறித்து சந்தேகம் இருப்பின் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரிடம் சந்தேகம் கேட்கலாம். தற்போது மருத்துவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் சிகிச்சையில் இருப்பதால் அவர்களை இயன்றளவு தொல்லை செய்ய வேண்டாம். தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு உங்கள் மாத்திரைகள் குறித்து ஆலோசனை செய்யுங்கள்.

​பாதுகாப்பான முறைகளை கடைபிடியுங்கள்
வீட்டில் இருப்பதால் நடைபயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் வீட்டில் மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். மனதில் நோய் குறித்த பாதிப்பை பதியசெய்து மன அழுத்தம் கொள்ள வேண்டாம்.குறிப்பாக சர்க்கரை, நீரிழிவு இரண்டு நோயையும் அதிகரிக்கவே செய்யும். அவ்வபோது சளி, இருமல் தொற்றுக்கு உள்ளாகும் குழந்தைகளும் பெரியவர்களும் உணவு முறையில் கூடுதல் கவனம் எடுத்து கொள்ளுங்கள்.
அதிகாலையில் மூச்சு பயிற்சி செய்வது சிறந்த பலனை தரும். குறைந்தது தினமும் மூச்சை ஆழமாக இழுத்து விடும் பயிற்சியாவது செய்ய வைப்பது நல்லது.கொரோனா பாதிப்பு வருவது இருக்கட்டும் முதலில் ஏற்கனவே இருக்கும் தொற்று பரவாமல் நோயை கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் நீங்கள் கொரோனாவையும் கடந்துவர முடியும்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments