++ கோடைகாலத்தில் கொரோனா பரவல் குறையுமா? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா
வைரஸ் தொற்று குறையும் என மசாசூட் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் (எம்.ஐ.டி) கணித்துள்ளார்கள்.

எம்ஐடியின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சராசரி வெப்பநிலையி்ல் உருவாகி உள்ளன. வெப்பநிலை அதிகரிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
கோடையில் குறையும்

உலகின் வடபகுதிகளில் கோடை வலிமை பெறும்போது கொரோனா வைரஸ் பரவுதல் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மார்ச் 22க்கு பிறகு சுற்றுச்சூழல் காரணிகளால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் வடக்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா (அமெரிக்கா மற்றும் கனடா) கோடையில் கட்டுப்படும் என்பதை எங்கள் ஆய்வு தெளிவுபடுத்துகிறது.


ஜனவரி 22 முதல் மார்ச் 21 இடையிலான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் முக்கிய காரணமாக இருந்துள்ளது. இவை 4 டிகிரி முதல் 10 டிகிரி வெப்ப நிலையில் பரவி இருக்கிறது.மார்ச் 10 க்குப் பிறகு, கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோடைகால வெப்பநிலை கொரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் என அந்த முடிவு தெரிவிக்கிறது.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...