NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கொசுக்கடிக்கு மத்தியில் போலீசின் ஊரடங்குப் பணி : நெகிழ வைக்கும் புகைப்படம்..!



வாட்ஸ்அப் குழுவில் தமிழ்நாடு காவலர் ஒருவரின் நிழற்படத்தைப் போட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பால் மக்கள் பத்திரமாக அவரவர் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் வெளியே இரவு என்றும் பகல் என்றும் பாராமல் போலீசார் பணியாற்றி வருகின்றனர். 144 தடையை மீறி வெளியே வரும் நபர்களை காவல்துறையினர் அறிவுரை வழங்கி நூதன தண்டனைகள் வழங்கும் சம்பவங்களும் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன. தடியடி நடத்தப்படுவதும் உண்டு.

இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேல் இருப்பவர்கள் யாரும் தெருவில், சாலைகளில் நின்றபடி 24 மணி நேரமும் காவல் காப்பதில்லை. இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் பொறுப்பில் இருக்கும் காவலர்களே களத்திலிருந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 24/7 பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர் ஒருவர் புகைப்படம் ஒன்று வாட்ஸ் அப் குழுவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல் காக்கும் பணியிலிருந்த அந்தக் காவலர் ஒரு கட்டடத்திற்கு மேல் சோர்ந்துபோய் நள்ளிரவு இரண்டு மணிக்குமேல் தன்னை மறந்து உறங்கியுள்ளார். அப்போது அவரை நூற்றுக் கணக்கான கொசுக்கள் சூழ்ந்துகொண்டு ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அதை யாரோ மனிதாபிமானம் உள்ள ஒருவர் படம் எடுத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்தப் படத்தைப் பார்த்தாலே மனம் பதைபதைக்கிறது. இவ்வளவு சுகாதார கேட்டிற்கு இடையில் இந்தக் காவலர் பணியாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஆகவே பொதுமக்களைக் காக்கும் பணியில் ஈடுபடும் இவரைப் போன்ற காவலர்களையும் அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் எனப் பலரும் கருத்து கூறி வருகின்றனர். அதில் சிலர் ‘பொதுமக்களே இந்த நிழற்படத்தைப் பார்த்தாவது வெளியில் சுற்றுவதைத் தவிருங்கள். அரசின் அறிவிப்பைக் கேட்டு நடந்துகொள்ளுங்கள். காவலர்களுக்கு இயன்றவரை ஒத்துழைப்பு தாருங்கள். உதவி செய்யுங்கள்” என எழுதி வருகிறனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive