10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலை மாறினால் தான், பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
மேலும் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் 12ஆம் வகுப்புக்கான மறுத்தேர்வின் முடிவுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், அதேபோல் 11ஆம் வகுப்பின் தேர்வு முடிவுகளும் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் செங்கோட்டையன் அறிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...