NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாழ்வாதாரம் இழந்த 329 வேதியியல் ஆசிரியர்கள்..!

டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்ற, 329 முதுகலை வேதியியல் ஆசிரியர்கள், பணி நியமனம் செய்யப்படாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் ~ டி.ஆர்.பி., ~ கணினி வழியில், 2019ல் தேர்வு நடத்தியது.

 அக்டோபரில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, நவம்பர், 20ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.இதில், வேதியியல் பட்டியலில், இடஒதுக்கீட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, தனி நபர் ஒருவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், வேதியியல் தவிர்த்து, பிற, 14 பாடங்களைச் சேர்ந்த, 1503 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தனி நபர் வழக்கால், 329 வேதியியல் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கவில்லை.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது:டி.ஆர்.பி.,யில் வெற்றி பெற்றதால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி, கடும் பொருளாதார சிக்கல்களுடன், மனவேதனையில் உள்ளோம்.

எங்கள் நலன் கருதி, சட்ட விதிக்கு உட்பட்டு, வழக்கு தொடர்ந்தவரின் பணியிடத்தை மட்டும் நிறுத்தி வைத்து, பிற ஆசிரியர் களுக்கு பணி நியமனம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.




1 Comments:

  1. 2019 முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வேதியல் பிரிவில் பொதுப் பிரிவில் இடம் பெற்றவர்கள் அவர்களுடைய பின்னடைவு பணியிடங்களை கொண்டு நிரப்பப்பட்டுள்ளது பொதுப் பிரிவு என்பது அனைத்து பிரிவினரும் அதிக மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும் அவ்வாறு இல்லாமல் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து சென்னை கோர்ட் வழக்கு தொடரப்பட்டது ஒற்றை நீதிபதியின் உயர்திரு ஆனந்த் வெங்கடேஷ் வழங்கிய தீர்ப்பு செல்லும் என மேல்முறையீட்டு மனுவில் நீதிபதி தீர்ப்பு வழங்கியது மேலும் இதுவரை புதிய பட்டியலில் தேர்வு செய்யப்படவில்லை இதுபோன்ற செயல்களால் இட ஒதிக்கீடு மற்றும் பொதுப் பிரிவு பாதிக்கப்படுவதுடன் இனிமேல் எந்தப் பிரிவினரும் பொதுப்பிரிவில் இடம்பெறாத வண்ணம் ஆசிரியர் தேர்வாணையம் தேர்வு பட்டியலை தயார் செய்து வெளியிட்டதில் விளைவாக எம் பி சி மற்றும் எஸ் சி பிரிவினர் உடைய 40 ஆசிரியர் பணியிடங்களை குறைந்த மதிப்பெண் பெற்ற பிசி பிரிவினருக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்தது சமூகநீதிக்கும் இட ஒதுக்கீடு இருக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய துரோகம் இன்றைக்கு ஒரு சமுதாயத்திற்கு அவங்க அவர்கள் ஆதிக்கத்திலுள்ள நபருக்கு அரசு வழங்கும் ஆனால் இதுபோன்ற அநீதி மற்றொரு ஆட்சியின்போது வேறு ஒரு பிரிவினர் ஆதிக்கத்தை எடுத்துக்கொள்வார்கள் அதன்மூலம் மற்ற பிரிவினர்கள் இதைப்போன்று பாதிப்புக்கு உள்ளாவார்கள் ஆகவே பொதுப் பிரிவு என்பது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவது மூலம் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு உயிர்த்தெழும் இதைப் போன்ற தவறுகளை இனிமேல் நடைபெறாத வண்ணம் அனைத்து பிரிவினரும் கண்டிக்கத்தக்கது ஆகவே பொதுப்பிரிவு என்பது அனைவருக்கும் சமம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போல பொதுப்பிரிவில் அனைவருக்கும் மதிப்பெண் அடிப்படையில் 31% தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கடைபிடிக்கவேண்டும் இதை அனைத்து கட்சி உன்னிப்பாக கவனித்து இதைப் போன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive